ஒரு டீ குடிச்ச.. அதுக்குள்ள இப்படி பண்ணிட்டாங்க – வெற்றிக்கு பிறகு தினேஷ் கார்த்திக் பேச்சு.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்துவரும் நிலையில். இந்த தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது இந்நிலையில் நேற்று புள்ளிபட்டியலில் கீழே இருக்கும் பெங்களூரு அணியும் குஜராத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸை வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்ய அது இவர்
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்துவரும் நிலையில். இந்த தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது இந்நிலையில் நேற்று புள்ளிபட்டியலில் கீழே இருக்கும் பெங்களூரு அணியும் குஜராத் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸை வென்ற ஆர்சிபி பந்துவீச்சை தேர்வு செய்ய அது இவர்களுக்கு சுலபமான ஒன்றாக போனது. சொல்லப்போனால் இலப்பத்திற்கு ஒன்றுமில்லை என்ற எண்ணத்தில் தான் ஆர்சிபி களமிறங்கியது.
இந்நிலையில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி ஆர்சிபியின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் தவிக்க 19.3 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 147 ரங்கள்மட்டுமே அடித்தது. இந்த சுலபமான இலக்கை எதிர்கொண்ட ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான விராட் மற்றும் கேப்டன் டுப்ளசிஸ் அற்புதமாக விளையாடிய நிலையில் திடீரென ஆர்சிபிக்கு விக்கெட்டுகளை மளமளவென விழுக ஆரம்பரித்தது.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் : ஒரு கோப்பை தேநீருடன் ஆரம்பித்து, 4 ஓவர்களுக்குப் பிறகு நான் ஒரு கப்புசினோ சாப்பிட்டேன். நான் பேட்டிங் செய்யப் போவதில்லை என்று நினைத்தேன். மேலும் நான் பேடும் காட்டவில்லை, நான் மனதளவில் விளையாட தயாராக இல்லை. ஜாலியாக இருந்தேன். பின்னர் திடீரென விஷயங்கள் நடந்தன. இதனால் நான் வேகமாக செயல்பட வேண்டியதிருந்தது. கொஞ்சம் தாமதமாக வந்தாலும் அதைச் செய்ய முடிந்தது.
இது மிகவும் வித்தியாசமான அழுத்தம். இதனால் அதனை எப்படி சந்திக்க வேண்டும் என்று வித்தியாசமாக யோசிக்க வேண்டியிருந்தது. வெற்றிபெற பவுண்டர்களை அடிக்க வேண்டும். மைதானம் பந்துவீச்சுக்கு ஏதுவாக இருந்தது. கவருக்கு அடியே இருந்ததால் கொஞ்சம் இருப்பதாகும் ஓட்டும் தன்மையாகவும் இருந்த்தது. இதனால் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்ததது சாதகமாக அமைந்தது.
கண்டிப்பாக பந்து வீச்சாளர்களுக்கு இந்த போட்டியை வென்ற பெருமை சேரும். கேப்டன் ஃபாஃப் மற்றும் விராட் பேட்டிங் செய்த விதம், நீங்கள் முதலில் பேட்டிங் செய்திருந்தால் சில வகையான ஷாட்களை விளையாடியிருக்க முடியாது என்று நினைக்கிறேன். அவர்கள் எப்படி பேட்டிங் செய்தார்கள் என்பதை பார்த்து நான் ரசித்தேன்.
நான் ஸ்வப்னிலிடம் வரும் பந்திற்கு மட்டுமே விளையாடச் சொன்னேன். அவர் ஸ்வீப் விளையாடடுமா என்று என்னிடம் கேட்டார், அதற்கு நான் சொன்னேன், ஸ்வீப் ஆடவேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு பின்வாங்காமல் ஷாட்டில் முழு ஈடுபாட்டுடன் விளையாடுங்கள் என்றேன். பின்னர் அவர் அந்த இரண்டு ஸ்வீப் ஷாட்களையும் செயல்படுத்தினார். அந்த ஷாட்டுகள் எங்களுக்கு தேவைப்பட்டது என்றார் தினேஷ் கார்த்திக்.