தோனிக்கும் ருதுராஜுக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லை.. அவரது மீது வைக்கும் இந்த குற்றசாட்டு தேவையில்லாதது – ஸ்டீபன் பிளமிங்

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தொடரை கடந்த தொடருடன் ஒப்பீடும் போது சில முக்கிய மாற்றங்ககள் நடந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பல காலம்மாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனி கேப்டன் பதவியில் இருந்து விலக

By ·

உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த தொடரை கடந்த தொடருடன் ஒப்பீடும் போது சில முக்கிய மாற்றங்ககள் நடந்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் பல காலம்மாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வந்த தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகி அணியின் இளம் வீரரான ருதுராஜ் கெய்க்குவாட்டிற்கு கேப்டன் பொறுப்பை கொடுத்துள்ளார்.

இதனை சிலர் வெறுத்தாலும் பலர் இனி வரும் காலங்களில் சென்னை அணிக்கு கேப்டன் தேவை என்பதினால் ஆதரிக்கின்றனர். இருந்த போதிலும் இந்த தொடரில் ருதுராஜ் கேப்டன்சி குறித்து பலவிதமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றது. குறிப்பாக ருதுராஜ் மெதுவாக விளையாடுகிறார் என்ற குற்றசாட்டு நிலவுகிறது. மேலும் கடந்த ஐந்து போட்டியில் 117 ஸ்ட்ரைக் ரேட்டில் 155 ரன்கள் மட்டுமே அடித்துள்ளதால் இடஙக விமர்சனம் பேசப்படுகிறது. இந்த நிலையில் தான் சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் : தோனிக்கும் ருதுராஜ்க்கும் இடையே எந்த வேற்றுமையும் இல்லை. தோனி எப்படி கூலாக இருக்கிறாரோ அதே போலத்தான் ருதுராஜும் கூலாக இருக்கிறார். இருவரும் ஒரே துணியில் இருந்து வந்தவர்கள் தான். ருதுராஜ் தனது விளையாட்டைச் சுற்றி மிகவும் ஈர்க்கக்கூடிய இளைஞராக இருக்கிறார் மற்றும். ஆனால் அவர் மெதுவாக விளையாடுகிறார் என்று நியாயமற்ற முறையில் கூறுவது தவறானது என்று நினைக்கிறேன். ஆனால் இந்த புள்ளிவிவரங்களில் சிலவற்றின் பின்னணி உங்களுக்கு இருக்க வேண்டும்.

இது ஒரு பாலிவுட் திரைப்படம் போன்றது எங்களுக்குத் தெரியும், சில சமயங்களில் இந்த விஷயங்கள் திரைக்கு வரும். ஆனால் ருதுராஜ் சிறப்பாக இருக்கிறார், நன்றாக விளையாடுகிறார். கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசில் ஆட்டத்தில் கூட ஒரு அணியின் கேப்டன் எப்படி விளையாடுகிறார் என்பதற்கு சிறந்த உதாரணம். ருதுராஜ் மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.

ருதுராஜை கேப்டனாக மற்ற வென்று என்ற எங்களுடைய திட்டம் இதுவரையில் சரியாக சென்று கொண்டுள்ளது. இதற்கு மேலேயும் அப்படியே செல்லும் என்று நினைக்கிறேன். அவரை வெற்றியின் அடிப்படையில் தரம் பிரிக்கின்றனர். ஆனால் அவரை வேறு விதமாக தரம் பிரிக்கிறம். அவரது கேப்டன்சி மிகவும் சிறப்பாக உள்ளது. இது மேலும் அப்பள வருடங்களுக்கு தோனி போலவே ருதுராஜும் அணியை வழிநடத்துவார் என்று நினைக்கிறேன் என்றார் ஸ்டீபன் பிளமிங்.

மேலும் தோனி குறித்து பேசிய அவர் கூறுகையில் : ரசிகர்களின் ஆதரவு நம்பமுடியாத ஒன்றாக இருக்கிறது. உண்மையில் தோனியின் ஆதரவில் நாங்கள் பலனடைகிறோம். ஒரு அணியாக வெளியே சென்று விளையாடும் போது மஞ்சள் செர்சியில் ரசிகர்கள் எங்களுக்கு ஆதரவு கொடுப்பது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதைக்குரிய ஒன்றாக பார்க்கிறோம் என்றார் ஸ்டீபன் பிளமிங்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை