நான் ஓய்வு பெற போகிறேனா? உண்மையை உடைத்த ஸ்டீவ் ஸ்மித்..என்ன சொன்னார் தெரியுமா?
உலகின் மிகச்சிறந்த வீரர்களை பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் பெயரும் இருக்கும். குறிப்பிடதக்க வகையில் ஒரு பந்துவீச்சாளராக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி பின்னர் அப்படியே தன்னுடைய திறமையை பேட்டிங்கில் வெளிப்படுத்தி கடுமையான பல பயிற்சிகளை ம
உலகின் மிகச்சிறந்த வீரர்களை பட்டியலிட்டால் அதில் கண்டிப்பாக ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்தின் பெயரும் இருக்கும். குறிப்பிடதக்க வகையில் ஒரு பந்துவீச்சாளராக தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கி பின்னர் அப்படியே தன்னுடைய திறமையை பேட்டிங்கில் வெளிப்படுத்தி கடுமையான பல பயிற்சிகளை மேற்கொண்டு உலகின் தலைசிறந்த வீரராக தற்போது ஸ்டீவ் ஸ்மித் தற்போது வலம் வருகிறார்.
இவர் படைத்திருக்கும் சாதனைகள் படைத்த இவர் டெஸ்ட் போட்டியில் 101 போட்டிகள் விளையாடி நம்பமுடியாத 9195 ரன்களையும் 32 சதங்கள் 37 அரை சதங்களை விளாசி இருக்கிறார். இவரது கிரிக்கெட் வாழ்கையின் இடையே பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கி சில காலம் தடைவிதிக்கப்பட்டு மீண்டும் கிரிக்கெட்டில் நுழைந்து தன்னுடைய பழைய பார்மிக்கே திரும்பி வந்துள்ளார்.
இந்நிலையில் பல ஆண்டுகாலம் விளையாடிவரும் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் தற்போது கிரிக்கெட் வாழ்க்கையில் பாதி அளவு கடந்து விட்டனர். இதனால் இவர்களது ஓய்வு எப்போது என தற்போது கேள்விகள் அங்கங்கே கேட்கப்படுகிறது. அப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் இருவரும் ஓய்வு பெற இருப்பதாக தான் கேள்விப்பட்டதாக கூறினார்.
ஆனால் அது தனக்கு உண்மையா? என்று தெரியவில்லை என்றும் சொன்னார். இந்நிலையில் டேவிட் வார்னர் ஏற்கனவே தன்னுடைய ஓய்வு எப்போது இருக்கும் என்பது குறித்து பேசிய நிலையில் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு எப்போது என்று கேள்வி எழும் நிலையில் அதற்கு பதிலளித்துள்ளார் அவர்.
ஸ்டீவ் ஸ்மித் கூறியது :
நான் இப்போது ஓய்வெடுக்க போவதில்லை. நான் ஓய்வு எடுக்க போவதாக யாரிடமும் சொல்ல வில்லை. இது போன்று செய்தி எங்கிருந்து வந்தது என்று எனக்கு தெரியவில்லை. நான் எங்கேயும் சொல்லப்போவதில்லை என்றார். மேலும் பேசிய அவர் கூறுகையில் “நான் பேட்டிங் செய்யும் விதம் எனக்கு நன்றாக இருக்கிறது. உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு பிற்காடு இந்த நாள் மிகவும் நன்றாக இருந்தது.
நான் இன்னமும் அதிக ரன்களை இந்த சுற்றுப்பயணத்தில் அடிக்க ஆசை வருகிறேன். ஆனால் கடந்த 6 போட்டிகளை 2 சதங்களை இந்த குளிர்காலத்தில் அடித்தது நியாயமான ஒன்றுதான் என்றார் ஸ்டீவ் ஸ்மித். எங்களில் பலருக்கு நாள் தொடக்கங்கள் கிடைத்தாலும் அவற்றை பயன்படுத்த முடியவில்லை, மேலும் 40 அல்லது 50 ஆக இருந்த பார்ட்னர்ஷிப்களில் ஒன்றை 100-150க்கு மற்ற முடியவில்லை.
எனவே அந்த வகையில் எனக்கு சற்று ஏமாற்றம். இன்னும் சில பார்ட்னர்களை உருவாக்கி நீண்ட நேரம் கலத்தில் விளையாடுவதை நான் விரும்புகிறேன் என்னுடைய ஓய்வு இப்போது கிடையாது என்றார் ஸ்டீவ் ஸ்மித்.