வீடியோ : அவர்கள் இன்னும் எனக்கு சிறந்த கேட்ச்சிற்கான விருது கொடுக்க வில்லை – கிண்டல் செய்த தோனி.

நேற்று நடந்த சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை vs ஹைதராபாத் ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு பேசிய மஹேந்திர சிங் தோனி கூறியவை தற்போது சோசியல் மீடியாவில் வாரியாளாகி வருகிறது. குறிப்பாக இது என்னுடைய கிரிக்கெட் வக்காயின் கடைசி கட்டம் என

By ·

நேற்று நடந்த சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சென்னை vs ஹைதராபாத் ஆட்டத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த வெற்றிக்கு பிறகு பேசிய மஹேந்திர சிங் தோனி கூறியவை தற்போது சோசியல் மீடியாவில் வாரியாளாகி வருகிறது. குறிப்பாக இது என்னுடைய கிரிக்கெட் வக்காயின் கடைசி கட்டம் என்று கூறியது சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இருந்த போதிலும் அவர் விடைபெறுவாரா என்று அதிகாரப்பூர்வமாக தெரியாவில்லை.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு தோனி கூறியதாவது “பத்திரனா வீசும் பந்துகளை அடிப்பது மிகவும் கடுமையான விஷயம். ஏனென்றால் அவருடைய வேகம் குறிப்பாக லைன் மற்றும் லெந்த் துல்லியமாக இருப்பதினால் அவருடைய பந்துகளை பேட்ஸ்மேன்கள் ஆடுவது மிகவும் கடினம். கண்டிப்பாக அவர் ஒரு நல்ல தேர்வு தான். நான் இரண்டாவது பேட்டிங் செய்ய தயங்கினேன். ஏனெற்றால் பனிமூட்டம் குறைவாக இருந்தது. அனால் சூழல் பந்து வீச்சாளர்கள் தங்களுடைய வேலையை சரியாக செய்து விட்டனர்.

குறிப்பாக நடு ஓவர்களில் சூழல் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீச கட்சி ஓவர்களில் வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாக செயல்பட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். நான் எப்போதுமே அவர்கள் வீசும் பந்திற்கு தகுந்தாற்ப் போல பீல்டர்களை நிறுத்த சொல்வேன். அதற்கு பிறகுதான் நான் செயல்படுத்துவேன். நானாக முன்வந்து அந்த காரியத்தை செய்ய மாட்டேன் என்றார் மஹேந்திர சிங் தோனி.

மேலும் பேசிய தோனியுடம் கீப்பிங் பற்றியும் அவர் பிடித்த அந்த ஆற்புதமான கேட்ச் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த தோனி “இவர்கள் அந்த கேட்ச்சிற்காக விருது எனக்கு கொடுக்கவில்லை. அந்த கேட்சை நான் சிறப்பான கேட்ச்சாக பார்த்தேன். ஏனென்றால் அந்த கேட்சை பிடிக்கும் போது நான் நின்று கொண்டிருந்த இடம் தவறானது. அதனால் தான் அந்த கேட்சை என்னால் பிடிக்க முடிந்தது என கிண்டலடித்தார் தோனி

மேலும் பேசிய அவர் ரசிகர்கள் அதனை எளிதாக கருதுகின்றனர். ஆனால் விக்கெட் கீப்பர்களிடம் கையுறைகள் இருப்பதினால் எளிதாக பிடிக்க முடிந்தது. இதே போன்று ஒரு கேட்ச்சை ராகுல் டிராவிட் கீப்பிங் செய்யும் போது பார்த்திருக்கிறேன். உங்களுக்கு வயது ஆக ஆக அனுபவம் கூடும். இல்லை என்றால் 16,17 வயதுகளில் சச்சின் விளையாட வந்ததை போல இருக்க வேண்டும். எனக்கு வயதாகி விட்டது அதை என்னால் மறுக்க முடியாது என்றார் தோனி.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை