விடை பெறுகிறார் யாராலும் மறக்க முடியாத இங்கிலாந்து அணியின் ஸ்டூவர்ட் பிராட் – அவரே கொடுத்த உருக்கமான பேட்டி.

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 1 போட்டியில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டி டிராவான இந்நிலையில் இந்த போட்டி இரண்டு அணிகளுமே மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இங்

By ·

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 1 போட்டியில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டி டிராவான இந்நிலையில் இந்த போட்டி இரண்டு அணிகளுமே மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இங்கிலாந்து அணியின் லெஜெட் வீரரான ஸ்டூவர்ட் பிராட் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

ஓய்வு குறித்து பேசிய ஸ்டூவர்ட் பிராட் கூறுகையில் “நாளை அநேகமாக திங்கட்கிழமை என்னுடைய கிரிக்கெட்டின் கடைசி விளையாட்டாக இருக்கும். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மியாகவும் அற்புதமான ஒரு பயணமாக இருந்தது. இங்கிலாந்து பேட்ஜை அணிந்து, இங்கிலாந்து அணிக்காக விளையாடுவது ஒரு பெரிய பாக்கியம் என கருதுகிறேன். நான் கிரிக்கெட்டை எப்போதும் போலவே நேசிக்கிறேன். இந்த அற்புதமான தொடரில் ஒரு பகுதியாக இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி, நான் எப்போதுமே முதலிடத்தில் இருக்க விரும்பினேன்.

இந்தத் தொடர் நான் ஒரு பகுதியாக இருந்ததில் மிகவும் சுவாரஸ்யமாகவும் பொழுதுபோக்காகவும் இருக்கிறது. நேற்று இரவு சுமார் 8.30 மணியளவில் நான் ஓய்வு பெறலாம் என்று முடிவு செய்தேன். இந்த விஷியத்தை பற்றி கடந்த சில வாரங்களாகவே நான் கடுமையாக யோசித்து வந்தேன். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போட்டிகள் எனக்கு எப்போதுமே ஒரு பெரிய போட்டியாக இருந்தது. ஆஸ்திரேலியாவுடனான போட்டிகளில் எனக்கு தனிப்பட்ட முறையிலும் ஒரு அணியாகவும் விளையாடுவது எனக்கு பிடிக்கும்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் எனக்கு ஆஷஸ் கிரிக்கெட் மீது அபரிவிதமான அன்பு இருக்கிறது. எனது கடைசி பேட்டிங் மற்றும் பௌலிங் ஆஷஸ் தோரில் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இது சரியான நேரம் என்று நினைத்தால் நான் நேற்றிரவு தான் ஸ்டோக்ஸிடம் சொன்னேன். இன்று காலை உடை மாற்றும் அறைக்கு சொன்னேன். என்னுடைய இந்த கடைசி ஆஷஸ் போட்டியில் நான் நல்ல கிரிக்கெட்டை ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட வேண்டும் என்று விரும்புவதாக கூறினார் ஸ்டூவர்ட் பிராட்.

ஆகஸ்ட் மாதம் 2006 28ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான T20I போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார் ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு வருடம் கழித்து 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங்கின் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசினார் அது இவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.

இருந்த போதிலும் கடுமையாக உழைத்த அவர் டிசம்பர் 9, 2007 அன்று இலங்கைக்கு எதிராக அவர் தனது புகழ்பெற்ற டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் 2015 ஆஷஸ் தொடரில் 9.3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று பாதகங்களில் இடம் பிடித்தார். இதனால் அஸ்திரேலியா 60 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை