“அந்த 6 சிக்ஸர்கள்” அப்போது எனக்கு 21-22 வயதுதான் – யுவராஜ் சிங்கை நினைவு கூர்ந்த ஸ்டூவர்ட் பிராட்.

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 1 போட்டியில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டி டிராவான இந்நிலையில் இந்த போட்டி இரண்டு அணிகளுமே மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இங்

By ·

வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 1 போட்டியில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டி டிராவான இந்நிலையில் இந்த போட்டி இரண்டு அணிகளுமே மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இங்கிலாந்து அணியின் லெஜெட் வீரரான ஸ்டூவர்ட் பிராட் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று போட்டி முடிந்ததும் பேசிய அவர் தன்னுடைய அதிகாரபூர்வ ஓய்வு அறிவிப்பையும், இதனை காலம் தனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கும் நன்றி கூறிய அவர் பின்னர் இந்திய அணியின் முன்னாள் வீரரான யுவராஜ் சிங் குறித்தும் பேசியிருந்தார். அப்போது கடந்த 2007ஆம் ஆண்டு இந்தியா vs இங்கிலாந்து போட்டியின் போது தன்னுடைய 6 பந்தில் 6 சிக்ஸர்களை அடித்த போது தனக்கு எப்படி இருந்தது என்பது குறித்தும் பேசியிருந்தார்.

அவர் கூறுகையில் “அந்த நாள் மிகவும் கடினமாக இருந்தது. சொல்லப்போனால் எனக்கு அப்போது 21, 22 வயதுதான் இருக்கும் என்று நினைக்கிறேன். அந்த சம்பவத்திற்கு பிறகு நான் நிறைய கற்றுக்கொண்டேன். அந்த அனுபவத்தின் மூலம் நான் ஒரு மன தைரியத்தை உருவாக்கி கொண்டேன். நான் ஒரு சர்வதேச வீரராக எனக்கு குறைவான அனுபவம் இருந்தது. நான் அவசரப்பட்டேன். பந்து வீசுவதற்கு முன்னாள் சில முறை செயல்படுத்தி பார்க்கும் வழக்கம் என்னிடம் இல்லை. எனக்கு எந்த கவனமும் இல்லை அப்போது என்றார் ஸ்டூவர்ட் பிராட்.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “அந்த அனுபவத்திற்குப் பிறகு என்ன ஒரு வாரியராக மாற்ற பயிற்சி எடுக்க தொடங்கினேன். உண்மையில்எ அந்த விஷயம் நடந்திருக்க கூடாது என்று தான் நான் விரும்புகிறேன். ஆனாலும் அது என்னை உலகக் கோப்பையில் இருந்து வெளியே அனுப்பியது போல தெரியவில்லை. மாறாக அது என்னை இன்றுவரை போராடும் போட்டியாளராக மாற்றியது. மேலும் அது என்னை பெரிய இடத்திற்கு செல்ல தூண்டியது என்றார் ஸ்டூவர்ட் பிராட்.

இந்நிலையில் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெறுவதற்கு யுவராஜ் சிங் தன்னுடைய வாழ்த்துக்களையும் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதில் “உங்களுடைய இந்த அற்புதமான டெஸ்ட் வாழ்க்கைக்கு வாழ்த்துகள். நான் பார்த்தல் ஒரு நல்ல பேட்ஸ்மேன்களுக்கு பயத்தை கொடுக்கும் ஒரு நல்ல சிகப்பு பந்துவீச்சாளர். அவர் உண்மையான லெஜெண்ட். உங்களுடைய இந்த வாழ்ககை பலருக்கும் முன்னோடியாக இருக்கும் என்று பாராட்டியுள்ளார் யுவராஜ் சிங்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை