எனக்கு பிடித்த வேகப்பந்து வீச்சாளர் இவர் தான் – இந்திய ரசிகர்களை ஆச்சரியப்படுத்திய ஸ்டூவர்ட் பிராட்.
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 1 போட்டியில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டி டிராவான இந்நிலையில் இந்த போட்டி இரண்டு அணிகளுமே மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இங்
வரலாற்று சிறப்பு மிக்க ஆஷஸ் 2023 தொடரானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது. ஏற்கனவே 2 போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், 1 போட்டியில் இங்கிலாந்து அணியும், ஒரு போட்டி டிராவான இந்நிலையில் இந்த போட்டி இரண்டு அணிகளுமே மிகவும் முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இங்கிலாந்து அணியின் லெஜெட் வீரரான ஸ்டூவர்ட் பிராட் தன்னுடைய ஓய்வு முடிவை அறிவித்து பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி பாகிஸ்தானுக்கு எதிரான T20I போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார் ஸ்டூவர்ட் பிராட். இங்கிலாந்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த போட்டியில் அவர் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஒரு வருடம் கழித்து 2007 டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் யுவராஜ் சிங்கின் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசினார் அது இவருக்கு மிகப்பெரிய பின்னடைவாக இருந்தது.
இருந்த போதிலும் கடுமையாக உழைத்த அவர் டிசம்பர் 9, 2007 அன்று இலங்கைக்கு எதிராக அவர் தனது புகழ்பெற்ற டெஸ்ட் வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் 2015 ஆஷஸ் தொடரில் 9.3 ஓவர்களில் 15 ரன்கள் மட்டுமே கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி வரலாற்று பாதகங்களில் இடம் பிடித்தார். மேலும் ஸ்டூவர்ட் பிராட் ஆஷஸ் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இங்கிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெற்று வரலாற்று புத்தகங்களில் தன்னுடைய பெயரை பொறித்தார்.
ஆஷஸில் 40 போட்டிகளில் 29.03 என்ற சராசரியில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுளார். அதுமட்டுமல்லாமல் ஆஷஸ் வரலாற்றில் அதிக விக்கெட்டுகளை ஒரு போட்டியில் வீழ்த்தியவர் என்ற பட்டியலிலும் 3 வது இடத்தில் இருக்கிறார் ஸ்டூவர்ட் பிராட். இந்த நிலையில் தான் ஆஷஸ் தொடர் முடிந்த பிறகு ஸ்டூவர்ட் பிராட் சர்வதேச போட்டிங்களில் இருந்து ஓய்வு பெற்றார்.இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு கொடுத்திருந்த பேட்டியில் தனக்கு பிடித்தான் வந்துவீச்சாளர் இவர் தான் என்று குறி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
அவர் கூறியதாவது “ஷாகின் ஷா அப்ரிடி தான் கிரிக்கெட்டில் நான் பார்க்க விரும்பும் பந்துவீச்சாளர்களில் ஒருவராவார். அவரது ஓடி வரும் ஆக்சன் மற்றும் பந்துவீசும் போதும் அவரிடம் நல்ல நம்பிக்கை இருப்பது போல தெரிகிறது. நான் பொதுவாகவே ஆற்றல் மற்றும் துடிப்புடன் ஓடி வரும் பந்துவீச்சாளர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவரிடம் இயற்கையாகவே திறமை இருக்கிறது. மேலும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு அவருடைய ஸ்விங் பந்துவீச்சை பார்ப்பது அற்புதமான ஓன்று.
மேலும் அவர் அவர் இந்த கோடை காலத்தில் நாட்ஸ் அவுட்லாக் அணியுடன் இணைந்து விளையாடுகிறார். அது என்னுடைய இதயத்திற்கு மிகவும் நெருக்கமான ஓன்று. மேலும் நான் மிகவும் ரசிக்கும் பந்து வீச்சாளர்களில் அவரும் ஒருவர். அவர் சிறப்பாக செயல்படுவதை நான் பார்க்க ஆசைப்படுகிறேன் என்றார் ஸ்டூவர்ட் பிராட்.