கேப்டன்ஷிப்பில் விசுவாசமாக இருக்க வேண்டும். ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாக விமர்சித்த சுப்மான் கில்.

குஜராத் அணியின் கேப்டனாக 24 வயதில், ஷுப்மான் கில் ஐபிஎல்லில் தனது முதல் கேப்டன் பதவியைப் பெற்றார். திங்களன்று, ஹர்திக் பாண்டியா வெளியேறியதைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் தனது புதிய கேப்டனாக குஜராத் அணி நியமித்து உள்ளது. குஜராத் அணியை IPL 2022 டைட்டில் மற்றும் IPL 2023 இல் இரண்டாம

By ·

குஜராத் அணியின் கேப்டனாக 24 வயதில், ஷுப்மான் கில் ஐபிஎல்லில் தனது முதல் கேப்டன் பதவியைப் பெற்றார். திங்களன்று, ஹர்திக் பாண்டியா வெளியேறியதைத் தொடர்ந்து குஜராத் டைட்டன்ஸ் தனது புதிய கேப்டனாக குஜராத் அணி நியமித்து உள்ளது. குஜராத் அணியை IPL 2022 டைட்டில் மற்றும் IPL 2023 இல் இரண்டாம் இடத்தைப் பிடித்த ஹர்திக் பாண்டியா, 2015 முதல் 2021 வரை 7 சீசன்களைக் கழித்த மும்பை இந்தியன்ஸுடன் மீண்டும் இணைந்தார்.

மும்பை அணியில் அவர் இடம் பெறுவதற்காக கேமரூன் க்ரீனை பெங்களூரு அணி வங்கியுள்ளது. ஹர்திக் திரும்பி வர அவர்களின் பழைய அணிக்கு இணைந்த பின் உடனடியாக குஜராத் டைட்டன்ஸ் தனது புதிய கேப்டனாக ஷுப்மான் கில்லை அறிவிப்பதில் நேரத்தை வீணடிக்கவில்லை. ஹர்திக் கேப்டனாக இருந்த போது கேன் வில்லியம்சன் மற்றும் துணை கேப்டனாக இருந்த ரஷித் கானை விட 24 வயதான கில் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.

சுப்மன் கில் 2018 ஆம் ஆண்டு KKR க்காக மீண்டும் ஐபிஎல்லில் அறிமுகமான ஷுப்மான் கில் ஐபிஎல்லில் கேப்டனாகும் முதல் வாய்ப்பு இதுவாகும். அவர் ஐபிஎல் 2023 இல் 3 சதங்கள் உட்பட 890 ரன்களுடன் ஆர்கன்ஸ் கேப் ஹோல்டராக இருந்தார். கில் இதற்கு முன்பு துலீப் டிராபி மற்றும் தியோதர் டிராபியில் இந்திய உள்நாட்டு அணிகளை வழிநடத்தியுள்ளார். தற்போது குஜராத் அணியை வழி நடத்த உள்ளார். கேப்டன் பதவி குறித்து கில் கூறுகையில் ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாக விமர்சித்து இருந்தார். அவர் கூறுகையில்

என்னை கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது எனக்கு மிகவும் சிறந்த உணர்வாக இருக்கின்றது. எனக்கு ஏழு எட்டு வயது இருக்கும்போது இருந்து எனது ஐபிஎல் தொடர் ஆரம்பித்துவிட்டது. கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் விளையாடும் விரும்பும் தொடராக ஐபிஎல் இருக்கின்றது. வெளிப்படையாகவே அணியில் விளையாடுவது அதுவும் கேப்டனாக இருப்பது என்பது. ஒரு கனவாக இருந்தது இந்த அணியில் அப்படி ஒரு அணியின் பிணைப்பதற்கான காரணியை இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

எங்கள் அணியில் என்னை விட தலைமை பொறுப்புக்கு தகுதியான வீரர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு இந்த அணியில் வெளிப்படையாகவே நிறைய கற்றுக்கொள்ள வேண்டியது இருக்கும் இதுவே சிறப்பானதாகவும் இருக்கும் எனக்கு இது மங்கலமான தொடர் ஆகும். கேப்டன்சி என்பது பல விஷயங்களை உள்ளடக்கியது அர்ப்பணிப்பு கடின உழைப்பு ஒழுக்கம் இது வெல்லம் அதற்குள் அடங்கும். மேலும் கேப்டன்ஷிப்பில் விசுவாசம் என்பது ஒரு முக்கிய அங்கமாகவும். நான் உலகின் சிறந்த கேப்டன்களுக்கு விளையாடி இருக்கின்றேன் அவர்களிடம் இருந்து நான் நிறைய கற்றுக் கொண்டு உள்ளேன். அதை எல்லாம் நான் ஐபிஎல் தொடரில் பயணிக்க எனக்கு உதவும் என்று நம்புகிறேன் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை