ஆடுகளம் நன்றாகத்தான் இருந்தது. எங்களது பேட்டிங் தான் சுமாராக இருந்தது – ஷுப்மான் கில் பேச்சு

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 32வது போட்டியில் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைத

By ·

உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 32வது போட்டியில் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. குஜராத் அணி கடந்த போட்டியில் வெற்றி பெற்றும் டெல்லி அணி கடந்த போட்டியில் தோல்வியை தழுவியும் இன்றைய போட்டியில் களமிறங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு மிகவும் சிறப்பான ஒன்றாக மாறியது. டெல்லி அணியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே குஜராத் அணியின் பேட்ஸ்மேன்களை அடுத்து அடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி வந்தனர். குராஜ் ட்னையின் வீரர்களால் நின்று விளையாட முடியாமல் அடுத்ததடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி மோசமான ரன்களை அடித்து டெல்லி அணிஇடம் விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதில் குஜராத் அணியின் வீரர்கள் சொல்லி கொள்ளு அளவிற்கு ரன்களை குவிக்கவில்லை.இதில் மூன்று வீரர்கள் மட்டுமே இரண்டு இலக்க ரன்களை அடித்து இருந்தனர்.குஜராத் அணியின் வீரர்களால் ஒரு வலுவான பார்ட்னர்ஷிப் கூட அமைக்க முடியவில்லை. இதில் அதிகபட்சமாக ராஷித் கான் 31 ரன்களையும் சாய் சுதர்ஷன் 12 ரன்களையும் ராகுல் திவாட்டிய 10 ரன்களையும் மட்டுமே அடித்து இருந்தனர். டெல்லி அணி சார்பில் முகேஷ் குமார் மூன்று விக்கெட்டுகளையும் இஷாந்த் ஷர்மா மற்றும் ஸ்டம்ப்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் அச்சர் மற்றும் கலீல் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்

எனவே குஜராத் அணி 17.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ரன்களை மட்டுமே அடித்து இருந்தது.இந்த எளிய இலக்கை அடைய பேட்டிங் செய்த டெல்லி அணியோ விக்கெட்டுகளை இழந்து வந்தது. இருப்பினும் 8.5 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 90 ரன்களை அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிக பட்சமாக மெக்குர்க் 20 ரன்களையும் சாய் ஹோப் 19 ரன்களையும் அடித்தும் போரேல் 15 ரன்களையும் அடித்து இருந்தனர். குஜராத் அணி சார்பில் சந்தீப் வாரியார் 2 விக்கெட்டுகளையும் ஜான்சன் மற்றும் ராஷித் கான் தலா ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.

ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக இந்த போட்டியில் தான் குஜராத் அணி 89 ரன்களில் ஆட்டமிழந்தது இதுவே முதல் முறை. அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றில் டெல்லி அணி பதிவு செய்த மிகப்பெரிய வெற்றி இதுதான். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 9 இடத்தில் இருந்து 6 இடத்திற்கு முன்னேறியுள்ளது. தோல்வி குறித்து கில் கூருகையில், எங்களின் பேட்டிங் மிகவும் சராசரியாக இருந்தது. இந்த விளையாட்டில் இருந்து முன்னேறி, அடுத்த ஆட்டத்திற்கு முன் அதே மனநிலையுடன் திரும்பி வர வேண்டும்.

விக்கெட் சரியாக இருந்தது. எங்கள் வெளியேற்றங்களைப் பார்த்தால் – நான், சாஹா மற்றும் சாய் – இதற்கும் ஆடுகளத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. எதிரணி 89 ரன்களை துரத்தும்போது, ​​உங்கள் பந்துவீச்சாளர் இரட்டை ஹாட்ரிக் எடுத்தால் ஒழிய, உங்களால் வெற்றி பெற முடியாது. இது சீசனின் பாதியில் உள்ளது, நாங்கள் ஏற்கனவே 3 கேம்களில் வெற்றி பெற்றுள்ளோம். கடந்த இரண்டு வருடங்களைப் போலவே இரண்டாவது பாதியிலும் 5-6 என்ற கணக்கில் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை