எம்ஜிஆர் பாடலில் வருவது போல சாய் சுதர்சனுக்கு அறிவுரை கூறிய தோனி.
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தமிழ் நாட்டை சாய் சுதர்சன் குஜராத் அணிக்காக மிகவும் சிறப்பாக விளையாடினார். கேன் வில்லியம்சனுக்கு ஏற்பட்ட காயம் சுதார்சனை களமிறங்கிய நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க ஆட்டத்தில் 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார் இது அணி நிர்வாகத்தின்
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் தமிழ் நாட்டை சாய் சுதர்சன் குஜராத் அணிக்காக மிகவும் சிறப்பாக விளையாடினார். கேன் வில்லியம்சனுக்கு ஏற்பட்ட காயம் சுதார்சனை களமிறங்கிய நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். தொடக்க ஆட்டத்தில் 17 பந்துகளில் 22 ரன்கள் எடுத்தார் இது அணி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்த்தது. அதனால் அவருக்கு மேலும் பல வாய்ப்புகளை கொடுத்தார்கள்.
இதன் விளைவாக சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிரான ஐபிஎல் இறுதிப் போட்டியில் 96 ரன்களை விளாசினார். தற்போது ஏ.சி.சி ஆண்கள் வளர்ந்து வரும் அணிகளுக்கான ஆசியா கோப்பையில் இந்தியா ஏ அணியில் விளையாடி வருகிறார் சுதர்சன். பாக்கிஸ்தான் ஏ-க்கு எதிரான சதம் உள்பட நான்கு இன்னிங்ஸில் 191 ரன்களில் அவர் அடித்துள்ளார். இந்த நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அவர் தோனி குறித்தும் விராட் கோலி குறித்தும் பேசியுள்ளார்.
சாய் சுதர்சன் பேட்டி :
அனைவருக்கும் மஹி பாய் நன்றாகவே தெரியும். அவர் மிகவும் அமைதியானவர், நான் அவருடன் பேசியிருகிறேன். அப்போது எனக்கு கூறுவர் முதலில் உங்களைப் பற்றி அறிந்து கொள்ளுங்கள், பின்னர் அணிக்காக நீங்கள் என்ன செய்ய முடியும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுவர். அதனை நீங்கள் சரியாக செய்தாலே மற்றவர்களை போல நீங்க்ள் இருப்பதை விடவும் உங்களுக்கு தெரிந்த விஷியத்தை நீங்கள் சரியாக செய்யலாம் என்று அவர் கூறியதாக தெரிவித்தார் சாய் சுதர்சன்.
மேலும் இதனை தான் பின்பற்றுவதாகவும் விராட் கோஹ்லியுடன் தொடர்பு கொண்ட அவரது அனுபவத்தையும் கற்றுக்கொள்வதாகவும் அவர் கூறினர். விராட் கோலி குறித்து பேசிய அவர் கூறுகையில் “விராட்டின் மனம் அழுத்திலும் மிகவும் வலுவாக இருக்கும். எனவே அந்த பண்பை நான் அவரிடமிருந்து எடுக்க விரும்புகிறேன். நான் அவருடன் பல முறை பேசியிருக்கிறேன் என்றார் சாய் சுதர்சன்.
சாய் சுதர்சன் பற்றி :
இந்நிலையில் தமிழ்நாட்டை சேர்ந்த சாய் சுதர்சன் ஏற்கனவே உள்நாட்டு கிரிக்கெட்டில் பல போட்டிளில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். அவர் எட்டு முதல் தர போட்டிகளில் 598 ரன்கள் எடுத்துள்ளார். மேலும் சராசரியாக 42.71 வைத்து இரண்டு சதங்களையும் அடித்துள்ளார். மேலும் அவர் 15 லிஸ்ட்-ஏ போட்டிகளில் 855 ரன்களை விளாசி சராசரியாக 65.76 வைத்துள்ளார். மேலும் 26 டி20 போட்டிகளில் 129 ஸ்டர்ட் ரேட்டுடன் 859 ரன்களை விளாசியுள்ளார்.
விராட் கோலி மற்றும் தோனி போன்ற அனுபவமுள்ள வீரர்களின் அறிவுரை சாய் சுதர்சன் வளர்ச்சிக்கு கண்டிப்பாக பெரும் பங்கை ஆற்றும். மேலும் திரிகால இந்திய கிரிக்கெட் சாய் சுதர்சன் போன்ற இளம் வீரர்களிடன் இருப்பதினால் கிரிக்கெட் ரசிகர்கள் பலரும் சர்வதேச அரங்கில் அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் காண ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்.