இவரை டெல்லி அணிக்கு கேப்டனாக போடுங்கள், அது இந்திய அணிக்கும் நல்லது – சுனில் கவாஸ்கர்.
ஐபிஎல் 2023 தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் அணைத்து அணிகளுமே மற்ற அணிகளை எதிர்கொண்டு தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் இரண்டையுமே சரியாக அறிந்து கொண்டனர். சில அணிகள் தொடர்ந்து நல்ல துவக்கத்துடன் புள்ளி பட்டியலில் முன்னேறி வருகிறது. மற்றொரு பக்கம் சில அணிகள் தொ
ஐபிஎல் 2023 தொடர் தற்போது கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் அணைத்து அணிகளுமே மற்ற அணிகளை எதிர்கொண்டு தங்களுடைய பலம் மற்றும் பலவீனம் இரண்டையுமே சரியாக அறிந்து கொண்டனர். சில அணிகள் தொடர்ந்து நல்ல துவக்கத்துடன் புள்ளி பட்டியலில் முன்னேறி வருகிறது. மற்றொரு பக்கம் சில அணிகள் தொடர் தோல்விக்கு பிறகு தங்களுடைய தவறுகளை அறிந்து அதனை சரி செய்து வருகிறது. அந்தவகையில் கூறவேண்டும் என்றால் டெல்லி அணியை குறிப்பிடலாம்.
ஏனெற்றால் ஐபிஎல் தொடங்கியது முதலே தோல்வியை சந்தித்த டெல்லி முதல் 5 போட்டிகளில் ஒரு வெற்றி கூட கிடைக்காமல் தடுமாறி வந்தது. ஆனால் கடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியிலும் ஹைதராபாத்திற்கு எதிரான போட்டியிலும் தொடர்ந்து 3 வெற்றிகளை பெற்றது டெல்லி கேபிடல் அணி. மேலும் இந்த வெற்றியின் மூலம் தங்களினால் கண்டிப்பாக பிளே ஆஃபிற்கு சென்னை முடியும் என்று நம்பிக்கையுடன் விளையாடி வருகிறது.
அப்படிப்பட்ட நிலையில் ஐபிஎல் தொடங்கியது முதலே பந்துவீச்சிலும் சரி பேட்டிங்கிளிலும் சரி சரியான ஆட்டத்தை காட்டி வருபவர் அக்சர் பட்டேல். இவர் இந்திய அணியில் சிறந்த ஆல்ரவுண்டராக இருக்கும் ஜடேஜாவை போல தொடக்கத்தில் சரியாக விளையாடவில்லை என்றாலும் அதற்கு பிறகு தன்னுடைய விளையாட்டை புரிந்து கொண்டு சரியாக விளையாடி வருகிறார். ஐபிஎல் சீசனிலும் சில பல போட்டிகளில் டெல்லி சிறப்பாக விளையாடிவரும் ஒரே வீரர் என்றால் அது அக்சர் பட்டேல் தான்.
அப்படிப்பட்ட நிலையில் தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஐபிஎல் வர்ணனையாளருமான கவாஸ்கர் சமீபத்தில் கூறுகையில் “எனக்கு அக்சர் படேல் மீது அதிக நம்பிக்கை இருக்கிறது. அவரை டெல்லி அணியில் கேப்டனாக நியமிக்க வேண்டும். அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கிறார். மேலும் இவர் கேப்டனாக செயல்பட்டு அதில் கிடைக்கும் அனுபவம் அவருக்கு இந்திய அணியில் இவர் விளையாடும் போது கைகொடுக்கும். அப்படி கொடுக்கப்படும் வாய்ப்பு நீண்டதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.
கவாஸ்கர் சொல்வது ஒரு வகையில் சரியாக இருந்தாலும் கடந்த ஆண்டு சென்னை அணியில் கேப்டனாக ஜடேஜாவை நியமிக்கும் போது அவரால் சரியாக அவருடைய விளையாட்டால் விளையாட முடியவில்லை. ஆனால் தற்போது மிகவும் பிரமாதமாக விளையாடி வ்ருகிறார். அப்படியொரு நிலையில் நன்றாக விளையாடிவரும் அக்சர் பட்டேலிடம் கேப்டன் என்ற சுமையை சுமத்துவது சரியான முடிவாக இருக்காது என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.