ரோஹித் ஷர்மா இந்தியாவிற்காக இதனை செய்ய வேண்டும் – சுனில் கவாஸ்கர்.

சமீபத்தில் சென்னை எதிராக மும்பை விளையாடிய போட்டியில் மும்பை அணியால் 20 ஓவரில் 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வதேரா அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே தரப்பில் அதிகபட்சமாக மதிஷா பத்திரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சாஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2

By ·

சமீபத்தில் சென்னை எதிராக மும்பை விளையாடிய போட்டியில் மும்பை அணியால் 20 ஓவரில் 139 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. வதேரா அதிகபட்சமாக 64 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே தரப்பில் அதிகபட்சமாக மதிஷா பத்திரனா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தீபக் சாஹர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரவீந்திர ஜடேஜா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

பதிலுக்கு 140 ரன்களை துரத்திய சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெவோன் கான்வே 44 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் கெய்க்வாட் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிவம் துபே 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்காமல் திரும்பினார். இந்நிலையில் மும்பை அணியின் தோல்விக்கு ரோஹித் ஷர்மாவின் ஆட்டமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது. ரோஹித் சர்மா இந்த போட்டியில் வழக்கத்திற்கு மாறான ஷாட் அடித்து டக் அவுட்டானார் அது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.

ரோஹித் ஷர்மா குறித்து சுனில் கவாஸ்கர் :

அப்படியொரு நிலையில் தான் இந்திய முன்னாள் அணியின் கேப்டனும் முன்னாள் வீரருமான சுனில் கவாஸ்கர் ரோஹித் ஷர்மா பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனனில் பேசியுள்ளார். அவர் கூறுகையில் “ரோஹித் சர்மா இந்த நேரத்தில் ஓய்வெடுத்து டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் சரியாக களமிறங்க வேண்டும். வேண்டும் என்றா அவர் சில கடைசி போட்டிகளில் விளையாடலாம். அவர் விளையாட்டில் இருப்பது போல் தெரியவில்லை.

அது தவறான ஷாட் :

நான் தவறாக இருக்கலாம் ஆனால் அவர் விளையாடிய ஷாட் ஒரு நல்ல கேப்டனுக்கான ஷாட் கிடையாது. ஒரு கேப்டனாக அணி சிக்கலில் இருக்கும் போது நல்ல இன்னிங்கை விளையாடி சரியான ஸ்கோர் எடுக்க உதவி செய்யய வேண்டும். நீங்கள் ஃபார்மில் இல்லாத சமயத்தில் நீங்கள் அடித்த ஸ்கூப் ஷாட்டை என்னால் புரிந்து கொள்ள முடியாவில்லை. கடந்த போட்டியில் நீங்கள் டக் அவுட் ஆகிய நிலையில் அது மிகப்பெரிய தவறான ஷாட்.

ஓய்வு எடுக்க வேண்டும் :

அப்படி ஒரு ஹாட் அடிப்பதற்கு முன்னர் நீங்கள் விளையாட வேண்டும், முதல் ரன் எடுக்க வேண்டும், கொஞ்சம் ஓட வேண்டும், அதற்கு பிறகு வேகமாக ரன்கள் எடுக்க வேண்டும், பிறகு பெரிய ஷாட்களுக்கு செல்ல வேண்டும். ஒருவேளை அவரது கவனம் வேறு இடத்தில் இருக்கலாம் எனவே தான் ரோஹித் சஹ்ரமா ஓய்வு எடுப்பது அவருக்கு பயனளிக்கும் எனக் கருதுகிறேன். இந்த முடிவை அவரும் அணி நிர்வாகமும்தான் எடுக்க வேண்டும் என்று கூறினார் சுனில் கவாஸ்கர்.

ரோஹித் ஷர்மாவை பொறுத்தவரையில் கடந்த ஐபிஎல் தொடர் மற்றும் இந்த ஐபிஎல் தொடரில் மிகவும் மோசமான ஃபார்மில் இருக்கிறார். அதுவும் இந்த சீசனில் கிட்டத்தட்ட பல போட்டிகளில் அவர் ஒற்றை இலக்க ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் ரோஹித் மொத்தம் 16 முறை ஆட்டமிழந்துள்ளார். ஐபிஎல் வரலாற்றில் இதைவிட அதிக முறை எந்த பேட்ஸ்மேனும் நடந்ததில்லை.

மேலும் இதற்கு முன் ரோஹித், தினேஷ் கார்த்திக், மன்தீப் சிங், சுனில் நரைன் ஆகியோர் 15 டக்களில் ஒன்றாக இருந்தனர். தற்போது இந்த பட்டியலில் ரோஹித் முதலிடத்தில் உள்ளார். மேலும் மும்பை இந்தியன் அணியும் தற்போது 10 போட்டிகள் விளையாடி 5 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் 6வது இடத்தில் இருந்து வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை