14 ஓவர்ல போய் 118 ஸ்ட்ரைக் ரோட்ல அவுட்டாக்கிட்டு இது வேனுமா? கோலியை விமர்சித்த கவாஸ்கர்.

உலக இந்திய அணியில் விராட் கோலி ஒரு நம்பமுடியாத வீரர். அவருடைய விளையாட்டு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெருமையாக பேசப்படும் அளவிற்கு பல திறமைகள் அவரிடம் இருக்கிறது. பல ஜாம்பவான் வீரர்களே அசரும் அளவிற்கு அவர்களின் சாதனைகளை முறியடித்து வருகிறார் விராட் கோலி. மேலும் பல ஐபிஎல்

By ·

உலக இந்திய அணியில் விராட் கோலி ஒரு நம்பமுடியாத வீரர். அவருடைய விளையாட்டு இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் பெருமையாக பேசப்படும் அளவிற்கு பல திறமைகள் அவரிடம் இருக்கிறது. பல ஜாம்பவான் வீரர்களே அசரும் அளவிற்கு அவர்களின் சாதனைகளை முறியடித்து வருகிறார் விராட் கோலி. மேலும் பல ஐபிஎல் தொடர்களிலும் அதிக ரன்களை அடித்து பல முடை ஆரஞ்சு கேப்பும் வாங்கியுள்ளார் விராட்.

இருந்த போதிலும் விராட் தன்னுடைய ஐபிஎல் அணியான பெங்களூருவுக்கு ஒரு கோப்பையை கூட ஒரு கேப்டனாக பெற்று தர முடியவில்லை. இந்நிலையில் இந்த சீசனில் விராட் ஆர்சிபியின் கேப்டனாக இல்லாத நிலையில் அவரது ஆட்டமும் கொஞ்சம் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக அவரது ஸ்ட்ரைக் ரேட் என்பது கடந்த சில போட்டிகளாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.

இந்நிலையில் கடந்த 28 ஆம் தேதி குஜராத் அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு பேசிய விராட் கோலி கூறுகையில் : ஸ்டிரைக் ரேட் மற்றும் நான் விளையாடுவதைப் பற்றி பேசும் அனைவரும் இந்த விஷயங்களைப் பற்றி பேச விரும்புகிறார்கள். ஆனால் என்னைப் பொறுத்தவரை இது விளையாட்டில் வெற்றி பெறுவது மட்டுமே. 15 வருடங்களாக நான் இந்த வேலையை செய்து வருகிறேன் என்றார் கோலி.

மேலும் பேசிய அவர் கூறுகையில் : வர்ணனை செய்யும் இடத்தில் இருந்து விளையாட்டைப் பற்றி பேசுவதற்கு, நீங்கள் அந்த சூழ்நிலையில் இருந்திருக்கவில்லையா என்று எனக்குத் தெரியவில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன். சிலர் தங்கள் சொந்த யோசனைகள் மற்றும் விளையாட்டைப் பற்றிய அனுமானங்களைப் பற்றி பேசுகின்றனர் என்று கூறியிருந்தார் கோலி.

இந்நிலையில் அதற்கு தற்போது பதிலளித்துள்ள முன்னாள் இந்திய வீரர் கவாஸ்கர் கூறுகையில் : விராட் ஸ்டிரைக் ரேட் 118 ஆக இருந்தபோதுதான் வர்ணனையாளர்கள் கேள்வி எழுப்பினர். எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. நான் அதிக போட்டிகளைப் பார்ப்பதில்லை, அதனால் மற்ற வர்ணனையாளர்கள் வேறு என்ன சொன்னார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் நீங்கள் வந்து ஓப்பன் செய்துவிட்டு பிறகு நீங்கள் 14வது அல்லது 15வது ஓவரில் அவுட்டாகும்போது ஸ்டிரைக் ரேட் 118 இருந்து அதற்கு நீங்கள் கைதட்டல்களை விரும்பினால் அது கொஞ்சம் வித்தியாசமானது.

மேலும் தங்களுக்கு வெளியில் என்ன பேசுகிறார்கள் என்பது பற்றி கவலை இல்லை என்பதை மேற்கோள் காட்டிய கவாஸ்கர் கூறுகையில் : இவர்கள் தங்களுக்கு வெளியே என்ன கூறினாலும் எங்களுக்கு கவலை இல்லை என்று கூறுபவர்கள் இதற்கு ஏன் பதில் கூற வேண்டும். நாங்க எல்லாரும் நிறைய கிரிக்கெட் ஆடவில்லை கொஞ்சம் கிரிக்கெட் விளையாடினோம். எங்களுக்கு விருப்பு வெறுப்புகள் இருந்தபோதிலும், நாங்கள் என்ன பார்க்கிறோம் என்பதைப் பற்றி நாங்கள் பேசுகிறோம் என்றார் கவாஸ்கர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை