ஆர்சிபி உங்களிடம் இருந்து இந்த மாதிரியான போட்டிங்கை எதிர்பார்க்கவில்லை – விமர்சித்த சுனில் கவாஸ்கர்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 41 போட்டியில் ஹைதராபாத் அணியும் பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் மோதி இர
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 41 போட்டியில் ஹைதராபாத் அணியும் பெங்களூரு அணியும் ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி இன்டர்நேஷனல் மைதானத்தில் மோதி இருந்தது.இந்த இரு அணிகளும் மோதிய கடந்த போட்டியில் ஹைதராபாத் அணி தங்களது அசுர தனமான பேட்டிங்கால் பெங்களூரு அணியை வீழ்த்தி இருந்தனர்.
ஆனால் நேற்றைய போட்டி அதற்கு மாற்றக்கவே அமைந்தது இன்றைய போட்டி அமைந்தது. இன்றைய போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் து பிளசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே தங்களது அதிரடியை காட்ட தொடங்கினார்கள்.ஆனால் இடையில் விக்கெட்டுகளை இழந்து வர படித்தார் தனது சிறப்பான பேட்டிங்கால் அணிக்கு வேகமாக ரன்களை அவர் குவித்து வந்தார்
20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை அடித்து இருந்தது. அதில் அதிக பட்சமாக விராட் கோலி 51 ரன்களும் படித்தார் 50 ரன்களும் கிரீன் 37 ரன்களும் அடித்து அணிக்கு ரன்களை குவித்து வந்தனர்.இடையில் மிடில் ஆர்டர்கள் விக்கெட்டுகளை இழந்து வந்த நிலையில் ரஜத் படித்தார் 20 பந்துகளில் 50ரன்களை அவர் அடித்து இருந்தார். அதில் அவர் 5 சிக்சர்களும் 3 பவுண்டரிகளையும் அவர் அடித்து இருந்தார்.
இந்நிலையில் இந்த போட்டியில் மோசமாக விளையாடிய விராட் கோலி குறித்து சோசியல் மீடியாவில் ட்ரோல்ல்களும் விமர்சனங்களும் நேற்று இரவு பறந்தன . சொல்லப்போனால் விராட் இன்னிங்க்கின் நூற்றில் 40 பங்கு பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்களை மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரர் சுனில் கவாஸ்கர் விராட் கோலியை விமர்சித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் :நடுவில் விராட் கோலி தன்னுடைய உத்வேகத்தை இழந்தது போல் தோன்றியது. எனக்கு சரியாக தெரியவில்லை ஆனால் 31-32 முதல் அவர் அவுட் ஆகும் வரை அவர் ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை என்று நினைக்கிறேன். எனவே நாள் முடிவில் நீங்கள் இன்னிங்ஸின் முதல் பந்தை எதிர்கொண்டு 14 அல்லது 15வது ஓவர் வரையில் விளையாடி ஸ்ட்ரைக் ரேட் 118 இல் இருக்கும் போது ஆட்டமிழந்தீர்கள். இதை உங்கள் அணி உங்களிடமிருந்து எதிர்பார்க்க வில்லை என்றார் கவாஸ்கர்.
இந்நிலையில் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலால்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு தொடக்கமே சோகமாக ஹெட் ஆட்டமிழந்தார் அதனை தொடர்ந்து சில விக்கெட்டுகள் விழுக தடுமாறிய ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்த 171 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.