விளையாட முடியாத டெலிவரியா? WTC இறுதிப் போட்டியில் கோலியின் தவறை சுட்டி காட்டிய சுனில் கவாஸ்கர்.
உலக கிரிக்கெட் ரசிர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலகக்கோப்பை டேஸ் சாம்பியன் ஷிப் போட்டியானது கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் டாஸை இழந்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் இதாவது நாளில் ஸ்மித்
உலக கிரிக்கெட் ரசிர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலகக்கோப்பை டேஸ் சாம்பியன் ஷிப் போட்டியானது கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் டாஸை இழந்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய நிலையில் இதாவது நாளில் ஸ்மித் 121 ரன்கள் எடுத்தார், அதேசமயம் ஹெட் 163 ரன்கள் குவித்து ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவிக்கு 469 ரன்கள் என்ற மிகப்பெரிய ஸ்கோரை எட்ட உதவினார்கள்
இந்நிலையில் இதற்கு பிறகு முதல் இன்னிங்கை தொடங்கிய இந்திய அணி தொடக்கத்திலே சொதப்பியது. அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா 26 பந்துகளில் 15 ரன்களிலும் அவரை தொடர்ந்து சுப்மன் கில் ரன்களிலும், புஜாரா 14 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுக்க, இந்தியாவின் பெரும் நம்பிக்கையான விராட் கோலியை மிட்செல் ஸ்டார்க் ஒரு பவுண்சரில் ஆட்டமிழக்க செய்தார். இதனால் விராட் கோலி 14 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.
சுனில் கவாஸ்கர் கூறியது :
இந்நிலையில் விராட் கோலி ஆட்டமிழந்தது குறித்து பேசிய சுனில் கவாஸ்கர் “இன்று நடந்த போட்டியில் ஒரு ஓவருக்கு இடந்து பவுன்சர்கள் மட்டுமே போடப்பட்டது. பல பேட்ஸ்மேன்கள் முன்னே பந்து ஆடினார்கள். இதனால் அவர்களிலும் பந்தை விடலாம் என்று என்னும் போது பின்னே சென்று இடைவெளியை கொடுக்க முடியவில்லை. ஆமாம் விராட் ஆட்டமிழந்தது கடினமாக டெலிவெரி தான். ஏனென்றால் அவர் முன்னே சென்டர் விட்டார். இதனால் அவரால் பேட்டை கடைசி நேரத்தில் எடுக்க முடியவில்லை என்றார்.
மேலும் சுப்மன் கில் மற்றும் புஜாரா பந்தை அடிக்காமலேயே ஆட்டமிழந்தது குறித்து பேசிய கவாஸ்கர் கூறுகையில் “அவர்கள் பந்துகளை விடாமல் இருந்திருக்கலாம். இங்கிலாந்து மைத்தனத்தை பொறுத்தவரையில் பந்துகளை தாமதமாக விளையாடுவது மிகவும் அத்தியாவசியமானது. எனவே பந்துகளை தாமதமாக விளையாட முயற்சி செய்யவேண்டும் தவிர பேட்டை மேலே தூக்க கூடாது. அப்படி அவர்களின் பேட் காற்றில் இருக்கும் போது பந்து உள்ளே நுழைந்ததால் அவர்களால் அதைக் கீழே கொண்டு வர முடியவில்லை என்றார்.
இந்நிலையில் தற்போது விளையாடிவரும் இந்திய அணியின் ஒரே நம்பிக்கையாக ரஹானே விளையாடி கொண்டிருக்கிறார். ரஹானே ஏற்கனவே பல டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இருக்கிறது. மேலும் இடையே விராட் கோலி இல்லாத போது இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று தொடரையும் வெற்றி பெற்று கொடுத்தார். மேலும் ரஞ்சி ட்ராபி மற்றும் ஐபிஎல் போட்டியிலும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினர் என்பது குறிப்பிடதக்கது.