ரோஹித் மற்றும் சூர்யாவுக்கு சென்னை அணியின் இந்த பவுலர் முட்டுக்கட்டையாக இருப்பார் – கவாஸ்கர் கணிப்பு.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை மற்றும் மும்பை அணி நேருக்கு நேர் மும்பை வான்கடே மைதானத்தில் மோத உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் சென்னை 3 வெற்றிக
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக தொடங்கியுள்ளது. ஏற்கனவே பல போட்டிகள் முடிவடைந்த நிலையில் இன்று ஐந்து முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற சென்னை மற்றும் மும்பை அணி நேருக்கு நேர் மும்பை வான்கடே மைதானத்தில் மோத உள்ளனர். இந்த ஐபிஎல் தொடரை பொறுத்தவரையில் சென்னை 3 வெற்றிகள் பெற்று மூன்றாவது இடத்திலும் மும்பை அணி 2 வெற்றிகளை பெற்று புள்ளிபட்டியலில் 7வது இடத்திலும் இருக்கிறது. இதனால் இந்த இரண்டு அணிகளுமே வெற்றி என்பது மிகவும் தேவையான ஓன்று.
சென்னை அணியை பொறுத்தவரையில் சிஎஸ்கே எப்போதும் போல தங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும், அல்லது சமயம் கிடைக்கும் போது சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தும். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் மும்பை அணியை அவர்களது சொந்த மைதானத்தில் எதிர்கொள்கின்றனர். இதனால் மைதானத்தின் தன்மை குறித்தும், ஈரப்பதம் குறித்தும் மும்பை அணிக்கு தெளிவாக தெரியும்.
இதனால் மும்பை அணிக்கு சாதகமான சூழ்நிலை இங்கு நிலவுகிறது. மேலும் அவர்களிடம் இந்தியாவின் நம்பர் 1 பந்துவீச்சாளர் என கருதப்படும் பும்ரா இருக்கிறார். இவர் டாட் பந்துகளை போடுவதிலும் விக்கெட்டுகளை வீழ்த்துவதிலும் வல்லவர். மறுபுறம் சென்னி அணியிலும் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருக்கின்றனர். அவர்களில் முக்கியமான ஒருவர் பங்களாதேஷ் அணியை சேர்ந்த முஸ்தப்பீர் ரகுமான்.
இவர் சென்னை அணியில் இணைந்த முதல் போட்டியிலேயே விக்கெட்டுகளை எடுத்து அசரவைத்தார். மேலும் இவர் வீசும் வேகமும் எதிரணியின் வீரர்கள் கணிக்க கடினமாக இருக்கிறது. மேலும் மெதுவாக பந்துவீசுவதில் இவர் வல்லவர் என்றே சொல்லலாம். இந்நிலையில் முஸ்தப்பீர் ரகுமான் மும்பைக்கு எதிராக எப்படி ஓரு காரணியாக இருப்பார் என்பது குறித்து பேசியுள்ளார் முன்னாள் இந்தியா வீரர் கவாஸ்கர்.
அவர் கூறுகையில் : நடக்கும் அனைத்து போட்டிகளிலும் சூர்யா மற்றும் ரோஹித் போன்ற பேட்ஸ்மேன்கள் மேற்பரப்பில் இருந்து வரும் பந்துகளை அடிக்க விரும்புவதை நீங்கள் அடிக்கடி பார்க்கிறீர்கள். பந்து வீச்சாளர் பந்துகளை மெதுவாக வீசும் போது அதனை அடிப்பது மிகவும் கடினமாகிவிடும். அதனால் ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே இருந்து விளையாடுவதற்கும். ஸ்வீப் ஷாட்டை விளையாடி உள்வட்டத்திலோ ஆழத்து வெளியிலோ ஆதமிழ்ப்பதற்கான வாய்ப்பு அதிகம்.
போட்டியில் முஸ்தாபிசுர் இதுவரை பந்துவீசிய விதம் அற்புதமானது. அவர் மெதுவாக பந்து வீசும் விதத்தையும், மெதுவான பவுன்சர்களை வீசும் விதத்தையும் நாம் பார்த்தோம். கடந்த ஓராண்டில் நாம் பார்த்ததை விட அவர் உண்மையில் மிகவும் சிறப்பாக பந்துவீசுகிறார். அவர் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறார். அது எதுவாக இருந்தாலும் முற்றிலும் மாறுபட்ட மற்றும் சிறந்த பந்துவீச்சாளராகத் தோன்றுகிறார் என்றார் கவாஸ்கர்.