கோலிக்கு ஈஸியா ரன் அடிக்க பிடிக்கவில்லை.. எல்லோரும் இத கவனிக்கணும் – சுனில் கவாஸ்கர் அதிரடி.

இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்

By ·

இந்திய ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த உலக கோப்பை 2023 தொடரானது தற்போது நடைபெற்று வருகிறது, இந்த தொடர்நது முழுக்க முழுக்க இந்தியாவில் நடைபெறுவாதினால் கடந்த 2011 உலக கோப்பையை போலவே இந்த முறையும் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்று கடந்த 10 ஆண்டுகளாக இந்தியா ஒரு ஐசிசி போட்டிகளில் கூட வெல்ல முடியாமல் இருக்கும் நிலைக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்பது நம்பப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் துரதிஷ்டவசமாக சுப்மன் கில் உடல்நிலை காரணமாக 2023உலக கோப்பை போட்டியில் இந்தியா விளையாடும் முதல் போட்டியான இந்தியா vs ஆஸ்திரேலியா போட்டியில் கலந்துகொள்ள வில்லை இதனால் அழுத்தம் என்பது இந்திய அணிக்கு கூடியது, அதற்கு தகுந்தாற் போலவே தொடக்க வீரர்களான ரோஹித் சர்மா, இஷான் கிஷான், ஸ்ரேயாஸ் இயற் உள்ளிட்டோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் அதற்கு பிறகு களமிறங்கிய விராட் கோலியும் கேஎல் ராகுலும் அசாத்தியமான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார், இந்த வருடத்தில் இந்தியாவின் சிறந்த பாட்னர்ஷிப்பை அமைத்து தோல்வியில் இருந்து வெற்றி பாதைக்கு இந்திய அணியை கொண்டு வந்தனர். ஆனால் விராட் கோலி சதம் அடிக்காமல் ஆட்டமிழந்தார், இருந்த போதிலும் தான் செய்ய வேண்டிய வேலையே கட்சிதமாக செய்து விட்டு சென்றுவிட்டார்.

இந்நிலையில் மிகவும் அழுத்தமான ஆட்டத்தை திறமையாக கையாண்ட விராட் கோலியை பலரும் பாராட்டி வரும் நிலையில் தான் முன்னாள் இந்திய வீரரான கவாஸ்கவர் கோலி குறித்து பேசியுள்ளார். அவர் கூறுகையில் ” அவர் அழுத்தத்தை ரசிக்கிறார் மற்றும் எளிதான ரன்களை விரும்பவில்லை. நீங்கள் அழுத்தத்தில் இருக்கும்போது, ​​உங்கள் ரன் அனைத்தும் மதிப்புமிக்கது. எனவே அழுத்தத்தை ரசிப்பது மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இன்னிங்கின் ஆரம்பத்தில் அதிர்ஷ்டம் தேவைப்படாத ஒரு பேட்டர் இல்லை.

ஆனால் அந்த அதிர்ஷ்டம் உங்கள் வழிக்கு வந்தவுடன், நீங்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும், அவர் அதில் மிகவும் திறமையானவர். உண்மையில் அவர் 85 ரன்களில் அவுட் ஆனது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது, ஏனெனில் அவர் பவுண்டரிகள் அடிப்பாமலேயே சதம் அடிக்கத் தெரிந்தவர் கோஹ்லி தான்.

இந்த போட்டியில் இந்தியா காட்டியது என்னவென்றால் தங்களின் முதுகில் சுமை இருந்தும் அவர்களால் அணியை மீட்க முடியும் என்பதுதான். நாங்கள் பார்த்த இந்த போட்டியானது மிகவும் ஈர்க்கக்கூடியது. இது ஒட்டுமொத்த ஆல்ரவுண்டர் செயல்திறன், இந்தியாவின் மிகச் சிறந்த செயல்திறன். நம்பிக்கை நிலை உயரும். எனவே மற்ற அணிகள் கவனிக்க வேண்டும் என்று கவாஸ்கர் கூறினார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை