“மஹி அப்படிப்பட்டவர் அல்ல” தோனியை பற்றி கருத்து கூறியுள்ள இந்திய முன்னாள் கேப்டன் கவாஸ்கர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தோனியை பற்றி பேசியுள்ளது தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி. சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னால் போதும் முதலில் நியாபகம் வருவது தல எம்.எஸ்.தோனி என்ற பெயர் தான், அந்த அளவிற்கு எம்.எஸ்.தோனிக்கும் ச

By ·

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில் தோனியை பற்றி பேசியுள்ளது தற்போது ஷோசியல் மீடியாவில் வைரலாகி. சென்னை சூப்பர் கிங்ஸ் என்று சொன்னால் போதும் முதலில் நியாபகம் வருவது தல எம்.எஸ்.தோனி என்ற பெயர் தான், அந்த அளவிற்கு எம்.எஸ்.தோனிக்கும் சென்னை மண்ணிற்கும் உள்ள ஒரு பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது. தமிழ் நாட்டு மக்கள் பல வட இந்தியர்களை வெறுத்தாலும் அனைவராலும் வெறுக்கப்படாத ஒரு வட இந்தியர் யார் என்றால் அது எம்.எஸ்.தோனி தான்.

அந்த அளவிற்கு சென்னை முழுவதும் ‘தல’ என்று அன்புடன் அழைக்கப்படும் தோனியின் இரண்டாவது சொந்த ஊர் சென்னை என்றே சொல்லலாம். ஐபிஎல் தொடங்கி காலத்திலிருந்து இன்று வரையில் அதிகமுறை ஒரே அணிக்கு கேப்டனாக இருந்த ஒரே வீரர் அது எம்.எஸ்.தோனி தான். அதோடு இவரது தலைமையில் சென்னை அணி நான்கு முறை ஐபிஎல் படங்களை வென்றிருக்கிறது. ஐந்து முறை இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடரில் 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றியும் 2 தோல்வியையும் பெற்றுள்ளது. இருந்த போதிலும். மேலும் இன்று நடக்கும் போட்டியில் ஆர்சிபி அணியை சின்னசாமி மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ள இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் கவாஸ்கர் தோனி பற்றி பேசியிருக்கிறார்.

அவர் கூறுகையில் :கடினமான சூழ்நிலைகளில் இருந்து எப்படி வெளியேறுவது என சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தெரியும். எம்எஸ் தோனியின் கேப்டன்சியில்தான் அது சாத்தியமானது. 200 போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது என்பது மிகவும் கடினம். ஏனென்றால் பல போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பது ஒரு சுமை. மேலும் அத சுமையால் அவர்களது செயல்திறனையும் பாதிக்கப்படலாம் என்று முன்னாள் இந்திய கேப்டனான கவாஸ்கர் கூறினார்.

மேலும் ஐபிஎல் வர்ணனையாளர் கூறுகையில் “ஆனால் தோனி முற்றிலும் மாறுபட்டவர் வித்தியாசமான கேப்டன். அவரைப் போன்ற ஒரு கேப்டன் இதுவரையில் இருந்ததில்லை, எதிர்காலத்தில் அவரைப் போன்ற ஒருவர் இருக்கவும் மாட்டார் ”என்று கவாஸ்கர் ஐபிஎல் ஒளிபரப்பாளர்களிடம் கூறினார். அவர் அப்படி கூறியது தற்போது சோசியல் மீடியாவில் படுபயங்கரமாக வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை