எனக்கு அது புரியவில்லை – நவீன் உல் ஹக் விக்கெட் கொண்டாட்டம் குறித்து கருத்து தெரிவித்த சுனில் கவாஸ்கர்.
நேற்று நடந்த ஐபிஎல் 2023 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் மும்பை அணி லக்னோ அணியை 16.3 ஓவர்களில் ஆல் அவுட் செய்து 81 ரன்கள் விதியசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களினால் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாள
நேற்று நடந்த ஐபிஎல் 2023 தொடரின் எலிமினேட்டர் போட்டியில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. இதில் மும்பை அணி லக்னோ அணியை 16.3 ஓவர்களில் ஆல் அவுட் செய்து 81 ரன்கள் விதியசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சுவாரசியமான சம்பவங்களினால் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் உல் ஹக் மீது ரசிகரக்ள் கடும் அதிர்த்தியில் இருக்கும் நிலையில் அது குறித்து கருத்து தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
சில நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி மற்றும் லக்னோ அணிகள் மோதிய போது விராட் கோலிக்கும் கம்பீருக்கும் பெரிய வாக்குவாதம் நடந்தது. ஆனால் அதற்கு முக்கியமாக கருதப்படுவது நவீன் உல் ஹக் தான். எனவே அப்போதிலிருந்தே ரசிகர்கள் நவீன் மீது கடும் கோபத்தில் இருந்தனர். அதற்கு தகுந்தாற் போல நவீனும் ஆர்சிபி vs மும்பை போட்டியில் போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் போட்டியில் ஸ்கீரின் ஷாட்டுகளை போட்டு சூசகமாக கிண்டல் செய்தார் நவீன்.
இதனால் கோபமடைந்த ரசிகர்கள் பதிலடி கொடுத்த வண்ணம் இருக்கையில் தான் நேற்று நடந்த போட்டியில் நவீன் உல் ஹக் மைத்தனத்தின் பவுன்டரிகளுக்கு அருகே நின்று பீல்டிங் செய்யும் போது அமர்ந்திருந்த ரசிகரகள் கோலி கோலி என முழக்கமிட்டனர். அப்போது நவீன் எதோ கையசைத்து சென்று விட்டார். அதற்கு பிறகு சில ஓவர்களிலேயே மும்பை அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா, கேமரூன் கிரீன், சூரிய குமார் யாதவ், திலக் வர்மா உள்ளிட்டோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி பதிலடி கொடுத்தார்.
ஆனாலும் ரசிகர்கள் நவீனை விடுவது போல இல்லை தொடர்ந்து கோலி கோலி என முழக்கமிட்டனர். அதுமட்டுமின்றி அவர் பந்து வீசும் போது கூட கோலி கோலி என முழக்கமிட்டனர். இருந்த போதிலும் மும்பை அணியின் சில முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய பிறகு காதுகளை முடிந்தகொண்டு விக்கெட் எடுத்ததை கொண்டாடினார்.
சுனில் கவாஸ்கர் கூறியது :
இந்நிலையில் தான் பேட்டி ஒன்றில் ஒன்றில் பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும், ஐபிஎல் வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர் லக்னோ அணியின் வீரர் நவீன் உல் ஹக் குறித்து பேசுகையில் “எனக்கு தெரிந்தவரையில் வருக்கும் பார்வையாளர்களுக்கும் இடையே பிரச்னை இருக்கிறது என்று நினைக்கிறன். அவர் போட்டியில் விக்கெட்டு எடுக்கும் போது காதுகளை திறந்து வெற்றியை கொண்டாட வேண்டும்.
அவர் ரசிகர்களின் கைத்தட்டலையும் ஆரவாரத்தையும் கேட்க வேண்டும். அதே போல யாரது சதம் அடிகிறார்கள் என்றால் அப்போதும் காதுகளை மூடி கொள்ள கூடாது. ரசிகர்களின் கைதட்டலை கேட்க வேண்டும். காதுகளுக்கு பின்னே கைகளை வைத்து “ஹலோ இப்பொது நான் உங்களுடைய சத்தத்தை கேட்கலாமா என்று கூற வேண்டும். அப்படிதான் வெற்றிக் கொண்டாட்டம் என்பது இருக்க வேண்டும். இதனை ஓரு வயதானவராக சொல்கிறேன் என்றார் சுனில் கவாஸ்கர்.