அஸ்வின் அப்படி கூறியதற்கு இது கூட காரணமாக இருக்கலாம் – “வீரர்கள் நண்பர்களாக இல்லை” என்ற கருத்திற்கு வருந்திய கவாஸ்கர்.

சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அதிர்ச்சியூட்டும் வகையில் உலக சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இடம்பெறவில்லை. இதனால் பெரும் விமர்சனம் இந்திய அணியன் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சயாளர்கள் மீது வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய உல

By ·

சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் அதிர்ச்சியூட்டும் வகையில் உலக சாம்பியன் ஷிப் இறுதி போட்டியில் இடம்பெறவில்லை. இதனால் பெரும் விமர்சனம் இந்திய அணியன் கேப்டன் மற்றும் தலைமை பயிற்சயாளர்கள் மீது வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய உலக கோப்பை டெஸ்ட் சம்பியன் ஷிப் போட்டியில் 209 ரன்கள் என்ற பெரும் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை தழுவியது இந்தியா.

இதனை தொடர்ந்தே தானும் இந்தியா இந்த இடத்திற்க்கு வர தானும் ஒரு காரணமாக இருந்ததால் இறுதி போட்டியில் விளையாட விரும்பியதாக கூறினார் அஸ்வின் கூறினார். அதனை தொடர்ந்து அஸ்வின் முன்னர் எல்லாம் சக வீரர்கள் நண்பர்களாக இருந்தார்கள். ஆனால் இப்போது வெறும் அணியில் இருக்கும் வீரர்களாக மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறினார். இதற்கு பலர் ஆதரவும், சிலர் விமர்சங்களையும் முன்வித்தனர். இப்படிப்பட்ட நிலையில் தான் அஸ்வின் கூறிய இதற்கு பதிலளித்துள்ளார் முன்னாள் இந்திய அணியின் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர்.

கவாஸ்கர் கூறியது :

அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில் கூறுகையில் “இது ஒரு சோகமான விஷயம், ஏனென்றால் விளையாட்டு முடிந்ததும் நீங்கள் ஒன்றாக இருக்க வேண்டும், மேலும் விளையாட்டைப் பற்றி தான்பேசவேண்டும் என்று கிடையாது. இசையைப் பற்றி பேசலாம், ஒருவேளை நீங்கள் விரும்பும் படங்களைப் பற்றி பேசலாம், ஒருவேளை விண்வெளியில் உங்கள் ஆர்வத்தைப் பற்றி பேசலாம். ஆனால் அது நடக்கவில்லை என்றால், அது ஏமாற்றம்தான்.

20 ஆண்டுகளுக்கு முன்பு அல்லது அதற்கு மேல் தொடங்கிய புதிய விஷயம் என்னவென்றால், ஒவ்வொரு வீரருக்கும் ஒரு அறை கிடைக்கிறது. அதுவும் இந்த விஷயத்திற்கு காரணமாக இருக்கலாம் என்றார் சுனில் கவாஸ்கர். மேலும் சுனில் கவாஸ்கரிடம் கடந்த 5 முதல் 10 ஆண்டுகளில் யாராவது பேட்டிங் குறித்த ஆலோசனைக்காக அவரை அனுகினார்களா என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர் “இல்லை, யாரும் வரவில்லை. முன்னர் ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வி.வி.எஸ் லட்சுமண் ஆகியோர் என்னிடம் அடிக்கடி வந்தனர்.

அவர்கள் ஒரு குறிப்பிட்ட பிரச்சனையுடன் என்னை அணுகுவார்கள். எனவே நீங்கள் அவர்களிடம் கவனித்த ஒன்றை சொல்லலாம். எனக்கு இதைப் பற்றி ஈகோ கிடையாது. நான் அவர்களிடம் சென்று பேசலாம், ஆனால் ராகுல் டிராவிட் மற்றும் விக்ரம் ரத்தோர் இரண்டு பயிற்சியாளர்கள் இருப்பதால் அதிக தகவல்களால் அவர்களை குழப்ப விரும்பவில்லை என்பதால் நீங்கள் பின்வாங்குகிறேன் என்றார் கவாஸ்கர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை