எனக்கு மிகவும் பிடித்தமான நபர்.. மனதை கவரும் சுனில் கவாஸ்கரின் இன்ஸ்டா பதிவு.
இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் செய்த சாதனையை இன்னும் பல வீரர்கள் முறியடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இவர் இந்தியா அணிக்காக மட்டுமின்று மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாடி இருக்கிறார். இருந்த ப
இந்தியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக கருதப்படுபவர் சச்சின் டெண்டுல்கர். இவர் கிரிக்கெட்டில் செய்த சாதனையை இன்னும் பல வீரர்கள் முறியடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். மேலும் இவர் இந்தியா அணிக்காக மட்டுமின்று மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாடி இருக்கிறார். இருந்த போதிலும் அவர் இந்திய அணிக்காக விளையாடி உலகோப்பையை வாங்கி கொடுத்து இன்னமும் யாராலும் மறக்க முடியாது.
அதே நேரத்தில் கடந்த 1983ஆம் ஆனால் இந்தியா முதல் முதலில் உலக கோப்பையயை வெல்லும் போது அந்த அணியின் தொடக்க வீரராக இருந்தவர் சுனில் கவாஸ்கர். இப்படி இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் இந்திய அணியில் இருந்த போதிலும் கவாஸ்கர் ஓய்வுக்கு பிறகே சச்சின் அணியின் இணைத்தார். இதனால் இருவரும் ஒன்றாக இணைந்து விளையாடுவதை ரசிகர்களால் காண முடியாமல் போனது.
இந்நிலையில் தான் சுனில் கவாஸ்கர் தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவு ஒன்றி இட்டுள்ளார். அந்த பதிவில் “கடந்த நூற்றாண்டில் சூரத்திற்கு அருகிலுள்ள ரயில் நிலையத்திற்கு எங்கள் விளையாட்டின் எல்லா காலத்திலும் சிறந்தவர்களில் ஒருவரான மற்றும் எனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரின் பெயரைப் பெயரிடுவது என்ன தொலைநோக்குப் பார்வை, ஆனால் அதைவிட முக்கியமாக எனக்கு மிகவும் பிடித்த அவர் என சச்சின் குறித்து பதிவிட்டுள்ளார் சுனில் கவாஸ்கர்
இந்நிலையில் சுமப்பதில் சுனில் கவாஸ்கர் குறித்து பேட்டி ஒன்றில் பேசிய சச்சின் டெண்டுல்கர் கூறுகையில் “எனக்கு இரண்டு வருத்தங்கள் உள்ளன. முதலாவது நான் சுனில் கவாஸ்கருடன் இதுவரை விளையாடியதில்லை. நான் வளர்ந்தபோது கவாஸ்கர் எனது பேட்டிங் ஹீரோவாக இருந்தார். அவருடன் ஒரு அணியில் விளையாடாதது வருத்தமாகவே உள்ளது. நான் விளையாடுவதற்கு சில வருடங்களுக்கு முன்பே கவாஸ்கர் ஓய்வு பெற்றார். அதற்கு பிறகு தான் நான் இந்திய அணியில் அறிமுகம் ஆனேன்.
எனது மற்றொரு வருத்தம் என்னவென்றால் எனது சிறுவயது ஹீரோ சர் விவியன் ரிச்சர்ட்ஸுக்கு எதிராக விளையாடவில்லை. கவுண்டி கிரிக்கெட்டில் அவருக்கு எதிராக விளையாடியது எனக்கு அதிர்ஷ்டம், ஆனால் இன்னும் ஒரு சர்வதேச போட்டியில் அவருக்கு எதிராக விளையாட முடியவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.