அவரிடம் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன் – ரோஹித் ஷர்மா கேப்டன்சி குறித்து கடுமையாக விமர்சித்த சுனில் கவாஸ்கர்.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்தும் அவருடைய கேப்டன்சி குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் விமர்சனம் செய்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் வெற்றி பெறாத நிலையில் கோலி அணியின் கேப்டன் பதவி
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சுனில் கவாஸ்கர் ரோஹித் சர்மாவின் பேட்டிங் குறித்தும் அவருடைய கேப்டன்சி குறித்து சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில் விமர்சனம் செய்துள்ளார். விராட் கோலி தலைமையிலான இந்திய அணி டி20 உலக கோப்பையில் வெற்றி பெறாத நிலையில் கோலி அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பிறகு அப்போது சிறப்பான ஃபார்மில் இருந்த ரோஹித் ஷர்மா இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
ஆனால் ரோஹித் ஷர்மாவினாலும் கடந்த டி20 உலக கோப்பையில் வெற்றிபெற முடியவில்லை. மேலும் சமீபத்தில் நடந்த உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதி போட்டியிலும் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி பெரும் தோல்வியை தழுவியது அனைவரது விமர்சனத்திற்கும் உள்ளாகியது. குறிப்பாக கேப்டன் ரோஹித் ஷர்மாவின் முடிவுகள் தான் இந்தியாவின் இந்த தோல்விக்கு காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன.
சுனில் காவஸ்கர் பேட்டி :
இந்நிலையில் தான் சமீபத்தில் சுனில் கவாஸ்கர் கொடுத்த பெட்டியில் 5 ஐபிஎல் கோப்பைகளை வென்ற ரோஹித் சர்மாவுடன் தான் அதிக எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார். இந்த விஷயம் குறித்து அவர் பேசுகையில் “நான் ரோஹித் ஷர்மாவுடன் இருந்து அதிகம் எதிர்பார்க்கிறேன். இந்தியாவில் நீங்கள் சிறப்பாக செயல்படலாம். வெளிநாட்டில் நிலைமை வேறு. நீங்கள் வெளிநாடுகளில் விளையாடும் போது சிறப்பாக செயல்படுவதே உண்மையான ஒரு பரீட்சை. ஆனால் அங்கேதான் ரோஹித் ஷர்மா கொஞ்சம் ஏமாற்றமளிக்கிறார் என்றார் கவாஸ்கர்.
ஏமாற்றம் :
சொல்லபோனால் இந்தியாவில் ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டுவிட்டு, 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் கேப்டனாக விளையாடிய அனுபவத்துடன், ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட பல வீரர்களுடன் களமிறங்கிய இந்தியா உலக கோப்பை டி20 போட்டியில் பைனலுக்கு செல்லாதது மிகப்பெரிய ஏமாற்றமே என்றார் சுனில் கவாஸ்கர். கடந்த உலக கோப்பை 2022 போட்டியின் அரையிறுதியில் இங்கிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது இந்தியா. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஏன் அப்படி செய்தீர்கள் :
மேலும் பேசிய அவர் “உலககோப்பை டெஸ்ட் சாம்பியன் ஷிப் போட்டியில் ஏன் நீங்கள் முதலில் பந்து வீச முடிவு செய்தீர்கள் என்று கேட்க வேண்டும். அவ்ர்கள் மழை காரணமாக பந்துவீச முடிவு செய்ததாக டாஸின் போது கூறினார்கள். அதற்கு அடுத்த கேள்வி என்னவென்றால் “டிராவிஸ் ஹெட் சார்ட் பந்துகள் அவருக்கு பலவீனம் என்று உங்களுக்கு தெரியாதா? 80 ரன்கள் எடுத்திருந்து செட்டில் ஆகிய பிறகு மட்டும் ஏன் பவுன்சர் பயன்படுத்தப்பட்டது?
உங்களுக்குத் தெரியுமா? ஹெட் பேட்டிங் செய்ய வந்த தருணத்தில், வர்ணனைப் பெட்டியில் இருந்த ரிக்கி பாண்டிங், அவருக்கு பவுன்சர் போடுங்கள், பவுன்சர் போடுங்கள் என்றார். இது பற்றி அனைவருக்கும் தெரிந்திருக்கிறது, ஆனால் இந்திய அணிக்கு தெரியவில்லை என்று விமர்சித்தார் சுனில் கவாஸ்கர். இதனிடையே வரும் உலக கோப்பை போட்டியில் தலைமை பயிற்சியாளர் ட்ராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்தியா வெற்றி பெற்று விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்பப்படுகிறது.