“மும்பை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ரோஹித் ஷர்மாவை கேப்டன்ஷிப்பில் இருந்து மாற்றியுள்ளது” – சுனில் கவாஸ்கர்.

மும்பை அணி நிர்வாகம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இது போன்ற முடிவுகளை தற்போது எடுத்துள்ளது என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்

By ·

மும்பை அணி நிர்வாகம் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இது போன்ற முடிவுகளை தற்போது எடுத்துள்ளது என்று முன்னாள் இந்திய வீரர் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். உலகெங்கும் நடைபெறும் லீக் போட்டிகளில் முக்கியமானது மட்டும் முதன்மையான லீக் போட்டிகளில் ஒன்று அது இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போட்டி தான். இது கடந்த 16 வருடங்களாக இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் பல நாடுகளை சேர்ந்த வீரர்களும் விளையாடுவதற்கு விருப்பமாக இருப்பார்கள்.

இது வணிக ரீதியாகவும் மிகப் பெரிய அளவில் விளையாடும் விளையாட்டு ஆகும். இந்த லீக் தொடரிலிருந்து முக்கிய அணிகள் என்றால் அது மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தான். அவர் 2013 ஆம் ஆண்டு கேப்டன் பதவி ஏற்ற பின் 2015, 17, 19 மற்றும் 20 ஆண்டுகளில் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்று கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு மும்பை அணியானது டிரேடிங் மூலம் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏலத்தில் எடுத்தது.

இது மும்பை அணி ரோகித் சர்மாவின் கேப்டன் பதவிக்கு பிறகு அவரை கேப்டன் சியில்ல் அமர வைப்பதற்கான திட்டம் என்று பலர் கூறி வந்தனர். ஆனால் தற்போது மும்பை அணி ரோஹித் ஷரம்வை கேப்டன் பதவியில் இருந்து விலகி ஹர்திக்பாண்டியாவை கேப்டன் ஷிப் பதவியை கொடுத்துள்ளது. ரோஹித் சாரமா கேப்டன் பதவியில் இருந்து விலகுவதற்கு முன்பாகவே மும்பை அணி நிர்வாகம் தற்பொழுது ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. கேப்டன் பகுதியில் ஹர்திக் பாண்டியாவிற்கு வழங்கி உள்ளது. இது குறித்து கவாஸ்கர் கூறுகையில்,

மும்பை அணி முடிவில் நாம் எதையும் சரி தவறு என்று நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது. அவர் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு அணிக்காக பேட்டிங் மூலம் மும்பை அணிக்கு ரன்களை குவித்து வந்தார். ஆனால் 2 வருடங்களாக அவரால் சரியாக விளையாட முடியவில்லை. மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த வருடம் இரண்டு வருடங்களாக 9 மற்றும் 10வது இடத்திலேயே பிளே ஆப்பிற்கு தகுதி பெறாமல் வெளியேறியது. கடந்த இரண்டு வருடங்களாக ரோஹித் ஷர்மா பேட்டிங் வழக்கமான ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் பேட்டிங் அளவிற்கு இல்லை.

அதை நாம் பார்க்கவும் தவறிவிட்டோம். அவர் தொடர்ந்து அடுத்தடுத்து கிரிக்கெட் விளையாடுவதால் அவர் மிகவும் சோர்வடைந்து விட்டார் என்று நான் நினைக்கின்றேன். எனவே மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் அணிக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தவே தற்பொழுது கேப்டன் பதவியை மாற்றி உள்ளது. அது மும்பை அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இவ்வாறு முடிவு எடுத்துள்ளது என்று சுனில் கவாஸ்கர் கூறியிருக்கின்றார்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை