2023 ஆண்டில் சிறந்த வீரர் விராட் கோலியும் கிடையாது முகமது ஷமியும் கிடையாது. இந்த இளம் வீரர் தான் சிறந்த வீரர் – சுனில் கவாஸ்கர் பேச்சு.
கடந்த வருடத்தின் சிறப்பான வீரர் என்று பார்த்தால் அதுவும் விராட் கோலியும் இல்லை முகமது சமியும் இல்லை சுப்மான் கில் தான் கடந்த வருடத்தின் சிறப்பான வீரர் என்றும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டுக்காரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 24 வயது ஆன அவர் இது வரை விளையாடிய 4
கடந்த வருடத்தின் சிறப்பான வீரர் என்று பார்த்தால் அதுவும் விராட் கோலியும் இல்லை முகமது சமியும் இல்லை சுப்மான் கில் தான் கடந்த வருடத்தின் சிறப்பான வீரர் என்றும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டுக்காரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். 24 வயது ஆன அவர் இது வரை விளையாடிய 48 போட்டிகளில் 2154 ரன்கள் அவர் அடித்துள்ளார். அதுமட்டுமல்ல மேலும் அவர் ஐபிஎல்லில் அதிக ரன்களை எடுத்து ஆரஞ்சு கேப்பை வென்றுள்ளார்.
2023 அவருக்கு மிகவும் மறக்க முடியாத வருடமாக அமைந்தது. இந்திய அணி உலக கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் அது இறுதி போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. இருப்பினும் இந்திய அணி மூன்று வடிவ போட்டிகளிலும் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்திய அணியின் வீரர்கள் 2023 சிறப்பாக விளையாடி இருந்தனர் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் விராட் கோலி ரோஹித் சர்மா கில் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்து இருந்தனர்.
இது குறித்து சுனில் கவாஸ்கரிடம் இந்திய அணியின் இந்த வருட சிறப்பான வீரர் யார் என்ற கேள்வியும் அவரிடம் முன்வைக்கப்பட்டது அதற்கு அவர் கோலி மற்றும் சமியின் பெயரை அவர் கூறவில்லை மாறாக 24 வயதான கில்லின் பெயரை தான் அவர் கூறியிருந்தார். இது குறித்து அவர் கூறுகையில், 2023 சீசன் முழுவதும் ஆட்டத்தின் அனைத்து வடிவங்களிலும் அவர் பேட் செய்த விதத்திற்காக ஷுப்மான் கில் தான் பிரேக்அவுட் பெர்ஃபார்மர் என்று நான் கற்பனை செய்கிறேன்.
தொடக்கத்தில் அவர் தடுக்க முடியாமல் இருந்தார், ஆனால் இறுதியில் அவரால் சிறப்பாக விளையாட முடியவில்லை. டெஸ்ட், ODI மற்றும் T20I போட்டிகளில் அவரது செயல்பாடுகள் விதிவிலக்காக இருந்தாலும், ஆண்கள் அணியைப் பொருத்தவரையில் அவர் பிரேக்அவுட் பெர்ஃபார்மராக இருப்பார் என்றும் அவர் கூறியிருந்தார். முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதானிடமும் இதே கேள்வி கேட்கப்பட்டது.
மேலும் அவர் கில்லையும் தேர்வு செய்தார். இர்பான் பதான் கூறுகையில் அந்த ஆண்டு கில்லுக்கு சிறப்பான ஆண்டு. குறிப்பாக ஒரு நாள் கிரிக்கெட்டில்… ஒரு இளம் வீரருக்காக, ஒருவேளை இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம், மற்றும் அவருக்கு எதிர்காலத்தில் கேப்டன்சி ஏற்கும் பொறுப்பும் வரும் . அவர் சதத்தை விளாசினார். இந்த ஆண்டு; அவரது சராசரி விதிவிலக்காக உள்ளது, மேலும் ODI கிரிக்கெட் அவருக்கு சரியான வடிவமாக தெரிகிறது என்றும் அவர் கூறினார்.