“சாய் சுதர்ஷன் சிறப்பாக பேட்டிங் செய்கிறார் ஆனால் அதை அவர் செய்தால் தான் அந்த இடம் அவருக்கு உறுதியாகும்” – சுனில் கவாஸ்கர் அறிவுரை.
இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட உள்ளது. அதில் முதல் கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 1-1 என்ற வித்தியாசத்தில் தொடரை சமன் படுத
இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட உள்ளது. அதில் முதல் கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 1-1 என்ற வித்தியாசத்தில் தொடரை சமன் படுத்தி இருந்தது. அதற்க்கு அடுத்த கட்டமாக 3 தொடர்களை கொண்ட ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார் அணியின் கேப்டன் மார்க்ரம். அது அவர்களுக்கு சிறப்பாகவே கை கொடுத்தது என்று சொல்லலாம். 46.2 ஓவர்களில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறினர். எனவே இந்திய அணியால் 211 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் முதல் போட்டியில் சொதப்பியது போலவே இன்றும் அவர் 4 ரன்னிலே ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணியின் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 83 பந்துகளில் 62 ரன்களும் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 56 ரன்களும் மற்றும் அர்ஷ்தீப் சிங் 18 ரன்களை மட்டுமே அடித்து இருந்தன. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தென்னாப்பிரிக்கா அணியின் சார்பில் பர்கர் 3 விக்கெட்டுகளையும், ஹென்ட்ரிக்ஸ் மற்றும் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வில்லியம்ஸ் மற்றும் மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.
212 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 42.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்களை எடுத்து இரண்டாவது போட்டியை வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிகபட்சமாக டோனி டி ஜோர்ஜி 119 ரன்களையும் ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்களையும் ராஸ்ஸி வான் டெர் டுசென் 36 ரன்களையும் அடித்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ரிங்கு சிங் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி தற்போது தொடரை சமன் செய்துள்ளது. சாய் சுதர்ஷன் ஆட்டம் குறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில்,
சாய் சுதர்ஷன் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். தன்னுடைய உடலுக்கு அருகில் வரும் பந்துகளை மிகவும் சிறப்பாக அடித்து விளையாடுகிறார். அவர் தலை எப்போதும் சாயாமல் உறுதியாக நிற்கின்றது. அதனால் அவர் விளையாடும் பொழுது நல்ல சமநிலையா அவருக்கு கிடைக்கும் என்று பொதுவாக இடது கை பேட்ஸ்மேன்கள் கவர் டிரைவ் அடிப்பதற்கு பார்க்க மிகவும் அழகாக இருக்கும். சாய் சுதர்ஷன் சிறப்பாகவும் அழகாகவும் செய்கிறார்.
அது மட்டுமல்லாமல் அவரது மன உறுதியும் திறமையும் மிக மிக சிறப்பாக இருக்கின்றது இப்போது அவர் அரை சதத்தை சதமாக மாற்ற முடியாததால் திருப்தி அடையாமல் அதிருப்தியில் இருப்பார் என்று நான் நம்புகிறேன். அப்படித்தான் இருக்க வேண்டும் ஒரு தொடக்க ஆட்டக்காரர் என்றால் களமிறங்கும் போது ஒவ்வொரு முறையும் சதம் அடிக்கும் வாய்ப்பு அவருக்கு இருக்கும் அவர் தனக்கு கிடைக்கும் வாய்ப்பை சதமாக மாற்ற வேண்டும் அப்படி அவர் செய்தால் தான் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் யார் என்று மக்கள் பேசுவார்கள் அந்த நிலையை அவர் உருவாக்க வேண்டும் என்றும் சுன்னில் கவாஸ்கர் கூறியிருந்தார்