“டேவிட் வார்னரை BLOCK செய்த சன்ரைஸ் அணி நிர்வாகம்”. மும்பை போல் முட்டாள் தனமாக எதையும் செய்ய வேண்டாம் என ரசிகர்கள் காட்டம்.

சன்ரைசஸ் அணி தன்னை BLOCK செய்து விட்டது என்றும் அந்த அணியின் முன்னாள் வீரர் தற்போது சர்ச்சையை ஏற்படுதியுளார். ஐபிஎல் 2024க்கான ஏலமானது துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தான் ஆஸ்திரேலியா அண

By ·

சன்ரைசஸ் அணி தன்னை BLOCK செய்து விட்டது என்றும் அந்த அணியின் முன்னாள் வீரர் தற்போது சர்ச்சையை ஏற்படுதியுளார். ஐபிஎல் 2024க்கான ஏலமானது துபாயில் இன்று நடைபெற்று வருகிறது. அதில் அனைத்து அணிகளும் வீரர்களை வாங்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் தான் ஆஸ்திரேலியா அணியின் உலககோப்பை வென்ற நாயகன் டிராவிஸ் ஹெட்டை சன்ரைசஸ் ஹைதராபாத் அணி அவரை 6.8 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தது.

இதனை தொடர்ந்து சன்ரைசஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் வீரரும் தற்போது டெல்லி அணியின் வீரருமான டேவிட் வார்னர் அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரையும் சன்ரைசஸ் அணியின் நிர்வாகத்தையும் TAG செய்து ஒரு பதிவு பதிவிட முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் அதை செய்ய முடியவில்லை. அதன் பின்பு அவர் சன்ரைசஸ் அணியின் எக்ஸ் பக்கத்தை அவர் பார்வையிட்டுள்ளார்.

அப்போது தான் அவருக்கு தெரிந்துள்ளது அவரை சன்ரைசஸ் அணி நிர்வாகம் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரை BLOCk செய்துள்ளது என்று அவருக்கு தெரிந்துள்ளது. அதன் பின் அதை அவர் SCREEN SHOT எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியாக அதை போட்டு இருந்தார். அதை பார்த்த மும்பை அணி மற்றும் ஹைதராபாத் அணியின் ரசிகர்கள் மும்பை அணி செய்தது போல முட்டாள் தனமாக எதையும் செய்யாதீர்கள் என்று ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் அவர்களது பதிவுகளை அவர் பதிவேற்றி வருகின்றனர்.

2016 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியை எட்டு ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த போது வார்னர் SRH ஐ அவர்களின் ஒரே IPL கோப்பைக்கு அழைத்துச் சென்றார். சவுத்பா 2014 முதல் 2021 வரை அவர் ஹைதராபாத் அணியில் விளையாடியுள்ளார். பின்னர் அவர் சரியான பேட்டிங் செய்யாததால் முதலில் PLAYING 11 அவருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கவில்லை. அவருக்கு பதிலாக கேன் வில்லியம்சன் அணியை வழிநடத்தி இருந்தனர். ஐபிஎல் 2022 க்கு முன்னதாக சன்ரைசர்ஸால் விடுவிக்கப்பட்டார்.

அணியில் இருந்து விலகிவிட்டால் இது போன்று தான் செய்வார்களா என்று சன்ரைசஸ் அணியை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மேலும் அவர்களுடன் தற்போது மும்பை அணியின் ரசிகர்களும் இணைந்து மும்பை அணி போல் முட்டாள் தனமாக எதையும் செய்ய வேண்டாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். மும்பை ரசிகர்கள் அவ்வாறு கூறுவதர்க்கான காரணம் என்னவென்று பார்த்தால் மும்பை அணி நிர்வாகம் ரோஹித் ஷர்மாவை கேப்டன் ஷிப் பதவியில் இருந்து விலகி ஹர்திக் பாண்டியாவற்க்கு கேப்டன் பதவியை வழகியது பல ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை எனவே அவர்கள் இணைந்து இது போன்ற கருத்துக்களை ககூறி வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை