கடைசி Ball திரில்லர், தவறிய ரன் அவுட் – வெற்றி பெற்ற வெறியில் ஹெல்மெட்டை தரையில் ஓங்கி அடித்த லக்னோ வீரர்

இன்று நடந்த லக்னோ vs பெங்களூரு போட்டியில் முதலில் டாஸ் வென்ற பந்து வீச முடிவு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி சிக்சர்களும் பவுண்டரிகளையும் பறக்கவிட்ட நிலையில் 44 பந்துக

By ·

இன்று நடந்த லக்னோ vs பெங்களூரு போட்டியில் முதலில் டாஸ் வென்ற பந்து வீச முடிவு செய்தது. அதன் படி முதலில் பேட்டிங் ஆடிய பெங்களூரு தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தியது. அணியின் ஓபனிங் பேட்ஸ்மேனான கோலி அதிரடியாக விளையாடி சிக்சர்களும் பவுண்டரிகளையும் பறக்கவிட்ட நிலையில் 44 பந்துகளில் 61 ரன்களை அடித்து அமித் மிஷ்ராவிடம் விட்கெட்டை பறிகொடுத்தார்.

அதன் பிறகு நிதானமாக விளையாடி வந்த டு பிளெசிஸ் மேக்ஸ்வெல் வந்த பின் அதிரடியாக மாறி பந்துகளை மைந்தானதிற்கு வெளியே அடிக்க ஆரம்பித்தார்பின்னர் பெங்களூரு கேப்டன் டு பிளெசிஸிடன் இணைந்த மேக்ஸ்வெலும் ரன்களை அதிரடியாக ஆடி குவிக்க ஆரம்பித்தனர். இருவரும் இணைந்து 44 பந்துகளில் 100 ரன்களை கடந்து லக்னோ அணியின் பௌலர் பந்தாடினார்கள்.அது லக்னோ அணி ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்தது.

ஆரம்பத்தில் இருந்து ருத்ர தாண்டவம் ஆடிய மேக்ஸ்வெல் 24 பந்துகளிலே 50 ரன்களை பூர்த்தி செய்தார். 6 சிக்சர்கள் மற்றும் 3பவுண்டரிகளையும் அடித்து 59 ரன்களை குவித்தார்.அதன் பின் மார்க் வுட் வீசிய பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2 விக்கெட்கள் இழப்பிற்க்கு 212 ரன்களை குவித்து. இந்நிலையில் தற்போது இரண்டவது இனிங்கை ஆட வந்த லக்னோ அணி தொடக்கத்திலேயே தடுமாறியது.

இந்நிலையில் இமாலய இலக்கை எடுக்க களமிறங்கிய லக்னோ தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்படிப்பட்ட ஒரு இக்கட்டான நிலைமையில் களமிறங்கிய லக்னோ வீரர் நிகோலஸ் பூரான் அதிரடியாக ஆடி பெங்களூரு அணியை கலங்க விட்டார். அதிலும் குறைவான பந்துக்கு அதிக ரன்கள் தேவைப்படும் நேரத்தில் அதிரடியாக ஆடி 15 பந்துகளில் அரை சதம் அடித்தார் நிகோலஸ் பூரான்.

ஆனால் 16 வது ஓவரின் போது சிராஜ் போட்ட பந்தை அடித்த பூரான் அவுட் ஆகினார். ஆனால் அவர் எதற்காக வந்தாரோ அதனை சரியாக செய்து விட்டு சென்று விட்டார். இந்நிலையில் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் லக்னோ அணிக்கு பயத்தை கூட்டி தொடர்ந்து அவுட் ஆகினார்கள். இந்நிலையில் கடைசி பந்தில் 1 ரன்கள் தேவைப்படும் நேரத்தில் கேட்சை விட்டார் DK அதோடு ரன் அவுட்டிலும் பேட்ஸ்மேன் உள்ளே இருக்கும் போது கோட்டை விட்டார்.

இந்நிலையில் ஓவர்கள் முடிவில் ஒரு ரன் வேண்டும் என்பதினால் பேட்ஸ்மேன்ஸ்கள் ரன் எடுக்க ஓடினார்கள். இறுதியில் அபார வெற்றி பெற்ற லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் அணியின் வீரர் வெறியில் ஹெல்மெட்டை கீழே தூக்கி அடுத்தார் அந்த வீடியோ தான் அந்த வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை