தோனி மட்டும் உங்களை வலைப்பயிற்சியில் அவுட் செய்துவிட்டால் அவரோடு ஒன்றரை மாதம் சேர்ந்து உட்காரவே முடியாது – சின்ன தல சுரேஷ் ரெய்னா.

எம்.எஸ்.தோனி உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். இவரை போல ஒரு கேப்டன் 100 வருடங்களுக்கு ஓரு முறை மட்டுமே தோன்றுவார்கள் என்று கூறியவர் பலர் இருக்கின்றனர். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்கு மட்டுமே உள்ளது. அதோடு பல ம

By ·

எம்.எஸ்.தோனி உலகின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவர். இவரை போல ஒரு கேப்டன் 100 வருடங்களுக்கு ஓரு முறை மட்டுமே தோன்றுவார்கள் என்று கூறியவர் பலர் இருக்கின்றனர். ஏனென்றால் இந்திய கிரிக்கெட்டில் மூன்று ஐசிசி கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமை தோனிக்கு மட்டுமே உள்ளது. அதோடு பல முன்னணி வீரர்களும் இவரது கேப்டன்சி மூலம் ரோஹித், விராட், அஸ்வின், ஜடேஜா போன்ற தங்களுடைய பயணத்தை தொடங்கியிருக்கின்றனர்.

அந்த வகையில் தோனியின் தலைமையின் கீழ் பல காலம் பயணம் செய்தவர் சென்னை மக்களும் அன்போடு சின்ன தல என்றழைக்கப்படும் சுரேஷ் ரெய்னாவை சொல்ல்லாம். இவர் விளையாடியபோது பேட்டிங்கில் தலைசிறந்த வீரராக இருந்தார். பல அற்புதமான ஷாட்டுகளை சரியான நேரத்தில் அடிப்பதில் ரெய்னா கைதேர்ந்தவர். அதுமட்டுமல்லாமல் சென்னை அணிக்காக இவர் ஆற்றிய அணி இன்றியமையாதது. அதோடு இவரின் பேட்டிங் அற்புதமான இருந்த காரணத்தினால் MR.IPL என்ற பெயர் கூட ரெய்னாவிற்கு இருக்கிறது.

ஆனால் சுரேஷ் ரெய்னா கடந்த 2020ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெரும் அதே நேரத்தில் ஐவரும் ஓய்வு பெற்றார். இந்நிலையில் சமீபத்தில் ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருந்த ரெய்னா தோனியின் விக்கெட் கீப்பிங், பேட்டிங் பற்றிமட்டுமல்லாமல் பந்துவீச்சு குறித்தும், போட்டிகள் இல்லாத போது தோனி எப்படி நடந்து கொள்வார் என்பதை பற்றியும் பேசியுள்ளார்.

சுரேஷ் ரெய்னா கூறியது :

அவர் கூறுகையில் “நான் இலங்கையின் முத்தையா முரளிதரனும், லசித் மலிங்காவும் தான் எதிர்கொண்ட மிகக் கடினமான பந்துவீச்சாளர்களாக இருக்க வேண்டும் என்றாலும் வலைகளில் எனக்கு கடினமானவர் தோனியாக இருந்தார். ஏனென்றால் அவரிடம் வலையில் ஆட்டமிழந்தால் நீங்கள் அவருடன் ஒன்றரை மாதங்கள் உட்கார முடியாது. ஏனென்றால் அவர் தொடர்ந்து உங்களை தோனி எப்படி அவுட் செய்தார் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருப்பர்.

அவர் ஆஃப் ஸ்பின், மீடியம் பேஸ், லெக் ஸ்பின் என அனைத்திலும் பந்து வீசுவார். அதுமட்டுமல்லாமல் வலைபயிற்ச்சியில் தன்னுடைய முன் கால் நோ-பால்களை நியாயப்படுத்துவார் என சிரித்துக்கொண்டே பேசினார் ரெய்னா. மேலும் தனக்கு பந்துவீச வாய்ப்புகள் கிடைக்கும் போது அப்போதெல்லாம் பந்துவீசுவார், இங்கிலாந்தில் அவருடைய பந்துவீச்சு ஃபுல் ஃபேஸில் இருக்கும் என்றார் ரெய்னா.

மேலும் பேசிய அவர் கூறுகையில் “ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணியை விட்டு வெளியேற தனக்கு பல வாய்ப்புகள் வழங்கப்பட்டதாகவும், ஆனால் தோனி தான் தன்னை தொடர்ந்து இருக்குமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவர் சொல்வதைக் கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் ரெய்னா கூறினார். “நான் உ.பி மற்றும் சென்னைக்கு கேப்டனாக இருந்தேன், மேலும் பல அணிகளும் என்னை அவர்களுடைய அணியில் இணைந்து விளையாட அணுகின.

ஆனால் தோனி பாய் தான் வேறு எங்கும் செல்ல வேண்டாம், நான் கேப்டன் நீங்கள் துணை கேப்டன் என்று கூறுவார். நான் கேப்டனாக வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை. விளையாடி எனது நாட்டை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் கடினமாக உழைக்கிறேன். ஆனால் கேப்டனாக இருக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் ஆசைப்பட்டதில்லை. நான் எப்போதும் ஒரு அணி வீரராக சக வீரர்களுக்கு உதவி அவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை