என்ன இருந்தாலும் ஃபாஃப் டு பிளெசிஸ் அப்படி பேசியிருக்க கூடாது.. ரோஹித் சர்மாவை பாருங்க – சுரேஷ் ரெய்னா விமர்சனம்.
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் பல மாற்றங்கள் கடந்த 17 ஆண்டுகளில் ஏற்பட்டாலும் ஆர்சிபி அணி கடந்த 17 ஆண்டுகளாக ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. சொல்லப்போனால் அவர்களது அணி சில நேரங்களில் மற்ற அணிகளை விடவும் சிறப்பாக வ
உலக புகழ்பெற்ற ஐபிஎல் 2024 தொடரானது தற்போது கோலாகலமாக நடந்து வருகிறது. இந்த போட்டியில் பல மாற்றங்கள் கடந்த 17 ஆண்டுகளில் ஏற்பட்டாலும் ஆர்சிபி அணி கடந்த 17 ஆண்டுகளாக ஒரு ஐபிஎல் கோப்பையை கூட வெல்ல முடியவில்லை. சொல்லப்போனால் அவர்களது அணி சில நேரங்களில் மற்ற அணிகளை விடவும் சிறப்பாக விளையாடுவார்கள். ஆனால் திடீரென மொத அணியும் சொதப்புவார்கள். இருந்த போதிலும் அவர்களது ரசிகர்கள் எந்த வீரரையும் விட்டுக்கொடுப்பதில்லை.
இருந்த போதிலும் பெங்களூரு அணி தொடர்ந்து எல்லா சீசன்களிலும் தோல்வியை தழுவி வருகிறது. என்னதான் வீரர்களை மாற்றினாலும், புதிய வீரர்களை களமிறக்கினாலும், இந்த தொடரும் கடந்த பல சீசன்களை போலவே செல்கிறது. சொல்லப்போனால் பந்துவீச்சு என்பது இவர்களின் மிகப்பெரிய ஒரு மோசமான பக்கமாக இருந்து வருகிறது.
என்னதான் ஆரசிபி அணியின் பேட்ஸ்மேன்கள் ரன்களை அடித்து ஸ்கொர் போர்டில் அதிகமாக ஸ்கொரை வைத்தாலும் அதனை பாதுகாக்கும் பொறுப்பு என்பது பந்துவீச்சாளர்களிடம் உள்ளது. அந்த இடத்தில் தான் அவர்கள் அதிகமாக சொதப்புகின்ற்றனர். இந்நிலையில் பெங்களூரு அணி ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது இளம் வீரர் மயங்க் தாகர் 30 ரன்களை 2 ஓவர்களில் விட்டுக்கொடுத்தார்.
இந்நிலையில் போட்டி முடிந்து பேசிய அணியின் கேப்டன் ஃபாஃப் டுப்ளசிஸ் கொஞ்சம் மயங்க் தாககூரை விமர்சித்து அந்த ஓவரில் தான் எங்களுடைய போட்டியின் தன்மை மாறியது என்று பேசியிருந்தார். இதனை தொடர்ந்து தான் முன்னாள் சென்னை அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா இது குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறுகையில் ; பத்திரிக்கையாளர்களுக்கு முன்னால் ஜூனியர் பற்றி இப்படி பேசினால் அது சரியல்ல. கேப்டனே ரன்களை எடுக்கவில்லை. நான் பல ஆண்டுகளாக ஃபாஃப் உடன் விளையாடி வருகிறேன், அவர் ஒரு அன்பான நண்பர், ஆனால் அவர் இளைஞர்களை ஆதரிக்க வேண்டும். ரோஹித் சர்மா இப்படி பேசுவதை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள் என்று விமர்சித்து பேசியிருந்தார் சுரேஷ் ரெய்னா.
இந்நிலையில் இன்று பெங்களூரு அணி கொல்கத்தா அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் அற்புதமாக விளையாடிய கொல்கத்தா அணி 222 ரன்களை விளாசியிருந்தார். இதனை தொடர்ந்து பேட்டிங் வந்த பெங்களூரு அணிக்கு மோசமான தொடக்கம் கிடைத்து. ஆனால் கடைசில் ஓவரில் கார்ன் அற்புதமாக விளையாடி 3 சிக்ஸர்களை விளாசி வெற்றிக்கு அருகே அழைத்து சென்ற நிலையில் பெங்களூரு அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.