உலக கோப்பையில் இந்தியாவின் துருப்புச் சீட்டு இவர் தான்.. ரோஹித் சர்மா மனசு வச்சா நடக்கும் – சுரேஷ் ரெய்னா.

இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டும

By ·

இந்தியாவில் பெரிதும் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் இறுதி கட்டத்தில் நாம் நெருங்கிவிட்ட நிலையில் இதற்கு பிறகு இந்தியா உலக கோப்பை டி 20 தொடரில் பாங்காகுபெற இருக்கிறது. கடந்த 10 வருடங்களாக எந்த சர்வதேச கோப்பைகளையும் வெல்லாத இந்திய அணி இந்த முறையாவது வெல்லும் என்று ரசிகர்களும் ஒட்டுமொத்த இந்தியாவும் இந்திய அணி கோப்பையை தகுவதற்கான நேரத்திற்காக காத்துக்கொண்டிருக்கிறது.

அதற்க்கு தகுந்தாற் போலவே இந்திய அணியில் ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், சிவம் துவே, சஞ்சு சாம்சன் என சிலருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது, இருந்த போதிலும் ஏற்கனவே இருக்கும் வீரர்களுக்கு பதிலாக இவர்களை எப்படி இந்திய அணி நிர்வகிக்க போகிறது என்பது தான் இப்போது ஒரே கேள்வியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் முன்னாள் இந்திய அணியின் வீரரான சுரேஷ் ரெய்னா இந்த விஷயம் குறித்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில் : உலகக் கோப்பையில் விராட் நம்பர் 3 இல் விளையாடுவதையே நான் விரும்புகிறேன். அவர் ஒரு ரன் மெஷின். யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் நல்ல ஃபார்மில் இருக்கிறார், அவர் ஒரு தொடக்க வீரராக சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். எனவே, என் கருத்துப்படி விராட் கோலி 3-வது இடத்தில் விளையாட வேண்டும்.

ஜெய்ஸ்வால் இளமையான வீரர், களத்தில் பயமின்றி விளையாடுகிறார். இவரை போலவே சிவம் துபே விஷயத்திலும் அப்படித்தான். இந்திய அணியின் நிர்வாகம் தூபேவிற்கு இடம் ஒதுக்க வேண்டும். துபே சிக்ஸர்களை அடிக்கும் விதம் போல வெகு சில வீரர்களுக்கே அத்தகைய திறன் உள்ளது. கடந்த காலங்களில் தோனியும் யுவராஜும் இதுபோன்ற பவர்-ஹிட்டிங் செய்ததை பார்த்திருக்கிறோம்.

உங்களுக்கு சிவம் துபே தான் துருப்புச் சீட்டாக இருப்பார். ஆனால் ஜெய்ஸ்வால் விளையாடும் அணியில் இருந்தால் ஆல்ரவுண்டர்களை இந்தியா தவறவிடக்கூடும். எனவே கேப்டன் ரோஹித் சர்மா கடினமான முடிவை எடுக்க வேண்டும், ஏனெனில் துபேவின் இருப்பு இந்திய அணிக்கு மேலும் 20-30 ரன்கள் வருவதை உறுதி செய்கிறது என்றார் சுரேஷ் ரெய்னா.

டி20 உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணி :

ரோஹித் சர்மா , யஷஷ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ். ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல். அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ்.

இருப்பு வீரர்கள்: சுப்மான் கில், ரிம்கு சிங், கலீல் அகமது, அவேஷ் கான்

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை