சிஎஸ்கே அணியிலிருந்து வெளியேறும் முன்பு தோனி என்னிடம் சொன்ன விஷயம் – உருக்கமான பேசிய ரெய்னா.
கடந்த ஐபிஎல் 2021ஆம் நடந்த ஐபிஎல் தொடரில் தனக்கு பதிலாக மூத்த பேட்டர் ராபின் உத்தப்பாவை நியமிக்கும் முடிவை எடுப்பதற்கு முன்பு கேப்டன் எம்எஸ் தோனி தன்னிடம் எப்படி ஆலோசனை செய்தார் என்பதை முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் ராபின் உத்தப்பாவுடன் நடந்
கடந்த ஐபிஎல் 2021ஆம் நடந்த ஐபிஎல் தொடரில் தனக்கு பதிலாக மூத்த பேட்டர் ராபின் உத்தப்பாவை நியமிக்கும் முடிவை எடுப்பதற்கு முன்பு கேப்டன் எம்எஸ் தோனி தன்னிடம் எப்படி ஆலோசனை செய்தார் என்பதை முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா சமீபத்தில் ராபின் உத்தப்பாவுடன் நடந்த உரையாடலில் நினைவு கூர்ந்தார். ரெய்னாவிற்கு அந்த சீசனில் காலில் காயம் ஏற்பட்டிருந்தது.
உத்தப்பா அப்போது CSK க்கு புதிதாக சேர்க்கப்பட்டவர், சீசனுக்கு முன்னதாக அவரது முன்னாள் அணியான ராஜஸ்தான் ராயல்ஸில் இருந்து வெளியேறிய நிலையில். டெல்லி கேப்பிடல்ஸுக்கு எதிரான சிஎஸ்கேயின் மோதலில் அவர் அறிமுகமானார். அந்த போட்டியின் டாஸில் ரெய்னா காயம் அடைந்ததாக தோனி கூறினார். எனவே ராபின் உத்தப்பா அந்த போட்டியில் விளையாடினார். ஆனால் அதற்கு பிறகு ரெய்னாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் ஜியோ சினிமாவில் பேசிய ரெய்னா தான் அணியில் இருந்து வெளியேறியது குறித்தும் தோனி தன்னிடம் கேட்டுக்கொண்டது குறித்தும் சாமேப்த்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார். அந்த பேட்டியில் ரெய்னா கூறுகையில் “எம்எஸ் தோனியும் நானும் பேசியபோது நீங்கள் ராபின் உத்தப்பாவை முயற்சிக்க வேண்டும் என்று அவரிடம் பரிந்துரைத்தேன். அதற்கு தோனி என்னிடம் உங்களை அணியில் விளையாட வைக்க அனுமதி கேட்டார்.
அதற்கு நான் அவரிடம் “உங்களை இறுதிப் போட்டிக்கு கொண்டு செயல் கூடியவர் ராபின் உத்தப்பா, என்னை நம்புங்கள்’ என்று நான் அவரிடம் சொன்னேன், என்று ஜியோ சினிமாவில் உரையாடலின் போது ரெய்னா உத்தப்பாவிடம் கூறினார்.
மேலும் தோனி என்னிடம் 2008 முதல் நம் ஒன்றாக விளையாடி வருகிறோம், ஆனால் இந்த சீசனில் நான் வெற்றி பெற விரும்புகிறேன், இப்போது நீங்கள் சொல்லுங்கள் என்ன செய்வது என்று என்னிடம் தோனி கேட்டார். நான் அதற்கு ராபினை நம்பர் 3 இல் விளையாடுங்கள், அவர் இறுதி வரையில் அணிக்காக விளையாட இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அவர் வெற்றி பெற்றால் சிஎஸ்கே வெற்றி பெறும். நான் விளையாடினாலும் சரி, அவர் விளையாடினாலும் சரி, ராபினும் ரெய்னாவும் ஒன்றுதான்” என்று அவர் மேலும் கூறினார்.
அந்த சீசனில் உத்தப்பா விளையாடிய நான்கு போட்டிகளில், அவர் 115 ரன்களை எடுத்ததன் மூலம், இறுதிப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் நான்காவது ஐபிஎல் பட்டத்தை கைப்பற்ற உதவினார். ஆனால் ரெய்னா ஐபிஎல் 2022 சீசனுக்கு முன்னதாக சிஎஸ்கேயால் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் மீண்டும் அணியில் விளையாடவில்லை.
ரெய்னா ஐபிஎல் மற்றும் சிஎஸ்கேயின் முன்னணி ரன்களை எடுத்தவர்களில் ஒருவராக இருந்தார், 205 போட்டிகளில் 32க்கு மேல் அடித்து சராசரியாக 39 அரைசதங்கள் மற்றும் ஒரு தனி சதம் உட்பட 5528 ரன்கள் எடுத்தார். உத்தப்பா கடந்த ஐபிஎல் 2022 இல் 12 போட்டிகளில் 23o ரன்களை குவித்தார். அதோடு கடந்த ஆண்டு அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடதக்கது.