இந்த விஷயத்தை ஒப்புக்கொள்ள எனக்கு எந்த வெட்கமும் இல்லை – சூரியகுமார் யாதவ் அதிரடி பேச்சு.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள்

By ·

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியானது பல தொடர் போட்டியில் விளையாடி வருகிறது. இந்த சுற்றுப்பயணத்தில் ஏற்கனவே இந்தியா டெஸ்ட் போட்டியில் 1-0 என்ற கணக்கிலும் ஒருநாள் போட்டியில் 2-1 என்ற கணக்கிலும் வெற்றி பெற்ற நிலையில் இந்திய அணியானது தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் அற்புதமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியானது இரண்டாவது போட்டியிலும் வெற்றியை பதிவு செய்தது.

இதனால் இந்த போட்டியில் இந்தியா வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்று சூழ்நிலையில் யஷஸ்வி மற்றும் சுப்மன் கில் ஆட்டமிழந்த பிறகு பொறுமையாக நின்று விளையாடிய திலக் வர்மா மற்றும் சூரிய குமார் யாதவ் இருவருமே இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெறுவதற்கு முக்கியமான ஒரு காரணமாக இருந்தார்கள். ஏனென்றால் விக்கெட்டுகள் விழுந்த போது வந்த இவர்கள் இருவரும் பொறுமையாக ஆடி 3வது விக்கெட்டுக்கு 87 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். மேலும் சூரிய குமார் யாதவ் 44 ரன்களில் 83 ரன்களை விளையாடினார், இதில் 4 சிக்ஸர்களும் 10 பவுண்டரிகளும் அடங்கும்.

இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு பேசிய சூரிய குமார் யாதவ் பேசுகையில் “நான் என்னை வெளிப்படுத்த முயற்சி செய்தேன், வேறு எதுவும் வித்தியாசமாக செய்யவில்லை. நான் மூன்றாவது சாத்ததை தவிர விட்டு விட்டதாக என்னிடம் கேட்கிறார்கள். உண்மைகள் நான் அடித்திருந்தால் அது என்னுடைய நாங்களது சதம். 47 கிடையாது 98 ரன்களில் இருந்தாலும் கூட நான் அணிக்கு என்ன தேவையோ அதை தான் செய்வேன், மையில் கற்களை பற்றி நான் யோசிப்பதில்லை.

டி20 கிரிக்கெட் என்பது முற்றிலும் மாறுபட்டது, மேலும் நாங்கள் அதிக டி20 போட்டிகளில் இளையாடுகிறோம். ஆனால் ஒருநாள் போட்டிகள் அப்படி கிடையாது, ஏனென்றால் அங்கு அதிக நேரம் காலத்தில் நிற்க்க வேண்டும். மேலும் அணி இருக்கும் சூழ்நிலைக்கு தக்கபடி பேட்டிங் செய்ய வேண்டும். மேலும் இறுதியில் ரன்கள் அதிகமாக இருந்து ஓவர்கள் குறைவாக இருக்கும் பட்சத்தில் அதனை டி20 போட்டி போல ஆட வேண்டும்.

எனது ODI பார்ம் என்பது மிகவும் மோசமாக உள்ளது. அதை ஏற்றுக்கொள்வதில் வெட்கமில்லை. நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியம், ஏனென்றால் நாம் அனைவரும் நேர்மையைப் பற்றி பேசுகிறோம். எனவே உங்கள் செயல்திறனைப் பற்றி நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியம். ஆனால் அதைவிட முக்கியமானது என்னவென்றால் அதை எப்படி மேம்படுத்துவது தான்.

நீங்கள் அதிகம் விளையாடாத ஃபார்மேட் இது, எனவே அதிகம் விளையாடி யோசிக்க வேண்டும் என்று ரோஹித்தும் ராகுல் சார் என்னிடம் சொன்னார்கள். கடைசி 10-15 ஓவர்களில் நீங்கள் பேட்டிங் செய்கிறீர்கள் என்றால் அணிக்கு என்ன செய்ய முடியும் என்று சிந்தியுங்கள். நாங்கள் உங்களிடமிருந்து விரும்புவது 15-18 ஓவர்களில் நீங்கள் பேட்டிங் செய்ய விரும்பினால் 45-50 பந்துகளில் விளையாட வேண்டும், சொந்தமாக விளையாடுங்கள். பொறுப்பை எப்படி ஒரு வாய்ப்பாக மாற்றுவது என்பது இப்போது என் கையில் உள்ளது என்றார் சூரிய குமார் யாதவ்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை