பிரச்சனைக்கு மேல் பிரச்சனை – மும்பை இந்தியன்ஸ் அணியில் மீண்டும் ஒருவர் காயம்.

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் காயம் அடைந்த வீரர்களால் அதிக அளவு சிக்கலில் உள்ள நிலையில் தான் தற்போது மீண்டும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசனை பெறுக வரையில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்

By ·

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் காயம் அடைந்த வீரர்களால் அதிக அளவு சிக்கலில் உள்ள நிலையில் தான் தற்போது மீண்டும் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. தற்போது நடந்து வரும் ஐபிஎல் சீசனை பெறுக வரையில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில், இரண்டாவது ஆட்டத்திலும் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்நிலையில் அடுத்த ஆட்டத்தில் அப்படியாவது வெற்றியடைந்தே ஆகவேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ளது.

ஐபிஎல் 2023 தொடரில் இன்று நடந்த 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டன. இப்போட்டியானது டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிலையில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பௌலிங் போட முடிவு செய்தது. அது அவர்களுக்கு சரியான முடிவு தான் என்று பிறகு தான் அவர்களுக்கு தெரிந்தது.

இந்நிலையில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் ப்ரித்வி ஷா 10 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே அடித்து ஹ்ரிதிக் சோக்கினிடம் விக்கெட்டை பறி கொடுத்து மீண்டும் டெல்லி அணிக்கு ஏமாற்றத்தை அளித்தார். சொல்லப்போனால் தொடக்க ஆட்டக்காரர்கள் டெல்லி அணிக்கு மிகவும் முக்கியமானவர்கள். அவர்கள் முதல் 6 ஓவர்களில் அடித்து கொடுப்பதுதான் அணியை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும். ஆனால் இந்த முறை சரியான தொடக்க வீரர்கள் டெல்லி அணியிடம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில் 17வது ஓவரின் போது அக்ஷர் படேல் சிக்ஸர் 6 அடிக்க முயற்சி செய்த போது பந்து நேராக சூர்யகுமார் யாதவின் கைகளுக்கு சென்றது, ஆனால் அது அவரது கையை விட்டு வெளியேறியது. இதையடுத்து பந்து அவரது முகத்தில் மோதிய பின்னர் எல்லைக்கு வெளியே சென்றது. இதனால் அக்சர் படேல் ஒரு சிக்ஸர் அடித்தார், ஆனால் சூர்யகுமார் யாதவ் காயம் அடைந்தார். அவர் வலியால் துடித்ததால் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனால் கேப்டன் ரோகித் சர்மா மிகவும் வருத்தமடைந்தார்.

உண்மையில், சூர்யகுமார் யாதவுக்கு முன், மும்பை இந்தியன்ஸ் அணி காயத்தால் பல வீரர்களை இழந்துள்ளது. ஜஸ்பிரித் பும்ரா காயம் காரணமாக இந்த முழுப் போட்டியிலிருந்தும் வெளியேறினார். காயம் காரணமாக ஜே ரிச்சர்ட்சன் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஜோஃப்ரா ஆர்ச்சரும் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை. இந்நிலையில் தற்போது மீண்டும் மும்பை இந்தியன்ஸின் நட்சத்திர வீரர் சூரிய குமார் யாதவ் காயமடைந்திருப்பது பாதகமாக பார்க்கப்படுகிறது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை