ரின்கு சிங்கை பார்த்தல் எனக்கு அந்த வீரர் தான் நியாபகம் வருகிறார். தோனி பற்றி மறைமுகமாக பேசிய சூர்யகுமார் யாதவ்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெற்று நேற்று இரண்டாவது போட்டியில் மோதின. இந்தப் போட்டியானது கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள

By ·

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடரானது தற்பொழுது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. அதில் முதல் தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணி எளிதாக வெற்றி பெற்று நேற்று இரண்டாவது போட்டியில் மோதின. இந்தப் போட்டியானது கேரளாவில் திருவனந்தபுரத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் பவுலிங் தேர்வு செய்தார் ஆனால் அது அவர்களுக்கு சரியான முடிவு இல்லை என்பது அதற்கு பின் தான் தெரிந்தது.

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 அவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 235 ரன்களை குவித்தது. இந்திய அணிக்கு ஆரம்பமே அதிரடியாக அமைந்தது ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 53 ரன்களும் கிஷான் கிஷன் 43 பந்துகளின் 52 ரன்களும் இந்திய அணியின் கேப்டன் குர்யகுமார் யாதவ் 19 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின்பு நிதானமாக விளையாடி வந்த ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும் குவித்து இருந்தனர்.

அதன் பின்பு வந்த இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிங்கு சிங் வந்த வேகத்தில் ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சாளர்களை போர் சிக்சர் என்று அடித்து விளாசி இருந்தனர். ரின்கு சிங் ஒன்பது பந்துகளில் 31 ரன்களை அடித்து இந்திய அணிக்கு பலமான இலக்கை அமைத்துக் கொடுத்தார். ஆஸ்திரேலியா அணியின் சார்பில் எலிஸ் மூன்று விக்கெட்டுகளையும் ஸ்டாய்னிஸ் ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்தி இருந்தனர்.

236 என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆரம்பத்தில் சரியான தொடக்கம் கிடைக்காததால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழத்து 191 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. எனவே இந்திய அணி ரன்கள் வித்தியசத்தில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. ஆஸ்திரேலியாவின் அதிகபட்சமாக ஸ்டாய்னிஸ் 45 ரன்களும் டிம் டேவிட் 37 ரன்களுக்கும் வேட் 42ஷார்ட் 19 ரன்களை மட்டுமே எடுத்து இருந்தனர். இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்து வந்தனர்.

ரவி பிஷ்னோய் மூன்று விக்கெட் களையும் பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டையும் அக்சர் பட்டேல், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட்டுகளையும் நிறுத்தி இந்தியா 44 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா. இந்த போட்டியில் ரின்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்து இருந்தார். அதில் 4 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். தற்போது இந்திய அணிக்கு சிறந்த பினிஷர் கிடைத்து வீட்டார் என்று பலரும் அவரை புகழ்ந்து வருகின்றனர்.

இந்திய அணியின் போட்டியின் வெற்றிக்குப் பிறகு ரின்கு சிங் பற்றி பேசிய சூர்யகுமார் யாதவ் கூறுகையில் ஒரு ரின்கு சிங் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அதிரடியாக பேட்டிங் செய்து வருகிறார். ரின்கு சிங்கை பார்ப்பதற்கு எனக்கு மற்றொரு இந்திய வீரர் தான் நினைவில் வருகிறார் என்று சூர்யா குமார் யாதவ் சிரித்தபடி கூறி இருந்தார். அதற்கு யார் என்று சொல்ல முடியுமா என்று கேட்பதற்கு கேட்டதற்கு சூரிய குமார் யாதவ் அதை கூற மறுத்துவிட்டார். ரிங்கு சிங் அதிரடி பேட்டிங்கை பார்பதற்கு தோனியின் பேட்டிங்கை பார்ப்பது போல இருக்கின்றது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை