ஒவ்வொரு போட்டியிலும் வித்தியாசமான ஷாட்டுகளை அடிக்க காரணம் என்ன? அவரே கூறிய விளக்கம்.
ஐபிஎல் 2023தொடரில் 57வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இதனை
ஐபிஎல் 2023தொடரில் 57வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் இடையே வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று பந்துவீச முடிவு செய்தார். முதலில் பேட் செய்த மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்தது.
சூரியகுமார் யாதவ் கூறியது :
இந்நிலையில் 27 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை வெற்றி பெற்ற முக்கிய காரணமாக இருந்தவர் சூர்யகுமார் யாதவ். மேலும் ஆட்டத்திற்கு பிறகு இவர் ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார். அப்போது விருது வழங்கும் விழாவில் பேசிய சூரிய குமார் யாதவ் கூறுகையில் :என்னுடைய சிறந்த டி20 இன்னிங்ஸில் இதுவும் ஒன்று என்று சொல்லலாம். நான் ரன் அடிக்கும் போதெல்லாம், அணி வெற்றி பெற வேண்டும் என்று நான் நினைக்கிறன்.
மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்று நாங்கள் முதலில் பேட்டிங் செய்தோம். 200 முதல் 220 ரன்களை துரத்தும்போது சரியான வேகத்தில் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பேசிய சூரியகுமார் யாதவ் கூறுகையில் மைதானத்தில் 7,8 ஓவர்களில் இருந்தே அதிகம் பனி இருந்தது. எந்த ஷாட்களை விளையாடுவது என்று எனக்குத் தெரியும்.
நான் ஷாட்டுகளை நேராக அடிக்க நினைக்கவில்லை என் மனதில் இரண்டு ஷாட்கள் இருந்தன – அதாவது ஒரு ஓவரில் ஃபைன் லெக் திசையிலும், மற்றோரு ஓவர் திரேட் மேன் திசையிலும் அடிக்க முயற்சி செய்தேன். விளையாட்டிற்கு முன் நிறைய பயிற்சிகள் எடுத்ததினால் விளையாட்டிற்கு வரும்போது நான் மிகவும் தெளிவாக என்னை வெளிப்படுத்த வெளிப்படுத்த விரும்பினேன் என்று கூறினார் சூரிய குமார் யாதவ்.
One of the most incredible shots of the night by Suryakumar Yadav.pic.twitter.com/cqqdH6EMER
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 12, 2023
இந்நிலையில் இந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தனது ஐபிஎல் வாழ்க்கையில் முதல் சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 49 பந்துகளில் 6 சிக்ஸர்கள் 11 பவுண்டரிகள் உதவியுடன் 103 ரன்கள் எடுத்தார்.