வலைப்பயிற்சிக்கு போனாலே அவர் என் பேட் இல்லனா காலை உடைச்சிருவாறு. அதான் இதனை வருடம் பும்ராவிடம் நான் வலையில் பயிற்சிக்கு போவதில்லை – SKY
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதில் நேற்று 25 வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதியது. இந்த இரு அணிகளும் இந்த சீசனில் ஒரே ஒரு வெற்றியை தான் பெற்று இருந்தார்கள். இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரு அணிக்கும் இருந்தது. அதில் நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன் படி பேட்டிங் செய்த பெங்களூரு அணி ஆரம்பத்தில் இருந்தே தடுமாறி தான் விளையாடி வந்தது. இருப்பினும் மிடில் ஆர்டரில் அவர்கள் சற்று தடுமாறி விளையாடவே ரன்கள் மெதுவாக அந்த இடத்தில் குறைந்தது. ஆனால் ஆதன் பின் தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். எனவே பெங்களூரு அணி 20வது ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்து இருந்தது. ஆரம்பத்தில் விராட் கோலி அதிக அளவில் ரன்களை குவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர்3ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அறிமுக வீரர் வில் ஜாக்ஸ் 8 ரன்னில் வெளியேற அதன் பின் வந்த படிதார் தனது அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார். 26 பந்துகளில் 61 ரன்களை அவர் அடித்து இருந்தார். அதன் பின் டு பிளசிஸ் 61 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன் பின் எந்த வீரரும் இரண்டிலக்க ரன்களை கூட அடிக்க முடியவில்லை. இறுதியில் தினேஷ் கார்த்திக் அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் 53 ரன்களை அவர் அடித்து இருந்தார். அவரது ஆட்டம் காரணமாக தான் பெங்களூரு அணி 196 ரன்களை குவிக்க முடிந்தது.
மும்பை அணியின் தொடக்கம் முதலே பேட்டிங் சிறப்பாக இருந்தது. எனவே அவர்கள் 197 இலக்கை 15.3 ஓவர்களிலே அடித்து முடித்து விட்டனர். அதில் வந்த அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இஷான் கிஷன் 34 பந்துகளில் 69 ரன்களும் ரோஹித் ஷர்மா 24 பந்துகளில் 38 ரன்களும் சூர்யகுமார் யாதவ் 19 பந்துகளில் 52 ரன்களும் ஹர்திக் பாண்ட்டியா 6 பந்துகளில் 21 ரன்களையும் திலக் வர்மா 10 பந்துகளில் 16 ரன்களையும் அடித்து இருந்தனர். பெங்களூரு அணி இது போன்ற மோசமான பந்து வீச்சாளர்களை வைத்து கொண்டால் 196 அல்ல 296 ரன்களை அடித்து இருந்தாலும் பெங்களூரு அணியால் வெற்றி பெற முடியாது.
போட்டி குறித்து சூர்யகுமார் யாதவ் கூறுகையில், வான்கடேவுக்குத் திரும்புவது எப்போதும் நல்லது. அணியில் இணைந்தது சிறப்பாக இருந்தது. மனதளவில் நான் இங்கே, உடல் ரீதியாக பெங்களூரில் இருந்தேன். மீண்டும் வருவதில் மகிழ்ச்சி, பனி இருந்தால் 200 துரத்தி வான்கடேவில் வருவது ஒரு வாய்ப்பைப் பெறுவது முக்கியம். நிகர ரன் ரேட்டிற்கு முன்னதாகவே முடிக்க விரும்பினேன். நான் களத்தில் விளையாட முயற்சிக்கிறேன். நான் இந்த ஷாட்களை பயிற்சி செய்கிறேன். இஷாமிடம் நல்ல ஷாட்களை அடிக்க கூறி இருந்தோம். எப்போதும் உங்கள் பக்கத்தில் ஜஸ்பிரிட் இருப்பது நல்லது. 2 முதல் 3 வருடங்கள் ஆகியும், இதுவரை வலையில் ஜஸ்பிரிட் பேட் செய்யவில்லை. அவர் எனது மட்டையை உடைப்பார் அல்லது எனது பாதத்தை உடைப்பார் எனவும் அவர் கூறினார்