என்னை வீழ்த்த RCB போட்ட திட்டத்தை உடைத்தது இப்படித்தான் – மும்பை வெற்றிக்கு பிறகு சூரியகுமார் யாதவ் பேட்டி.
ஐபிஎல் 2023 லீக்கில் 54 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் பௌலிங்கை தேர்வு செய்தார்.அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் ஆரம்பம் சோதனையாகவே ஆரம்பிக்க கோலி 1
ஐபிஎல் 2023 லீக்கில் 54 வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும், மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் பௌலிங்கை தேர்வு செய்தார்.அதன் படி களமிறங்கிய பெங்களூரு அணியின் ஆரம்பம் சோதனையாகவே ஆரம்பிக்க கோலி 1 ரன்களில் வெளியேற, அதன் பின் வந்த ரவாத் 6 ரன்களில் அவுட்டாகினார்.
அணியின் கேப்டன் டு ப்ளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இணைந்து அற்புதமாக இணைந்து விளையாடி 100 பார்ட்னர்ஷிப்பை பூர்த்தி செய்தனர். மேக்ஸ்வெல் 68 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற, டு ப்ளசிஸ் 65 ரன்களில் வெளியேறினார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது பெங்களூரு அணி.
200 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணி ஆரம்பத்திலே அதிரடி பாணியை விட வில்லை. இருப்பினும் மற்றொரு பக்கம் அதிரடியாக விளையாடி வந்த இஷான் கிஷன் பெங்களூரு அணியின் பௌலிங்கை சிதறடித்து வர 42ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். அதன் பின் கேப்டன் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அதற்க்கு பின் வந்த சூர்யகுமார் யாதவ் அவருடைய சிறப்பனாக இன்னனிங்சை விளையாடி அணிக்கு நம்பிக்கை சேர்த்தார்.
அவருடன் இணைந்து விளையாடி வந்த வதேரா 34 பந்தில் 52 ரன்களை அடித்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இவர்களின் சிறப்பான இன்ன்னிங்சால் 200 இமாலய இலக்கை 16.3 ஓவர்களிலே எட்டி வெற்றி பெற்றனர். இந்த சிறப்பான ஆட்டத்தின் மூலம் மும்பை அணி புள்ளி பட்டியலில் 3 இடத்திற்கு முன்னேறியுள்ளது.
சூரியகுமார் யாதவ் கூறியது :
இந்த வெற்றி எங்களது அணிக்கு மிகவும் முக்கியமானது. சொந்த மண்ணில் இப்படி ஒரு போட்டியில் வெற்றி பெற்றதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எதிரணியினர் ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். என்னை சிக்க வைக்க முயன்றனர். வேகத்தைக் குறைத்து மெதுவாக பந்துவீசினார். அப்போது நான் நேஹாலிடம் கூறினேன் இப்படி நடந்தால் வேகமாக மைதானத்தில் அடித்து ரன்களை எடுக்கலாம் என்று கூறினேன்.
Suryakumar Yadav in the last 6 innings in IPL 2023:
— Johns. (@CricCrazyJohns) May 9, 2023
– 57(26)
– 23(12)
– 55(29)
– 66(31)
– 26(22)
– 83(35)
The backbone of Mumbai batting. pic.twitter.com/sSVcjm78iX
போட்டிகளில் நீங்கள் என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதுவாகவே உங்கள் பயிற்சி இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறன். எனக்கு எங்கே ரன்களை எடுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். எங்களிடம் திறந்த வெளியிலான பயிற்சி கூடங்கள் இருக்கின்றன. என் ஆட்டத்தை நான் விளையாடினேன் தவிர புதிதாக எதுவும் செய்யவில்லை என்று கூறினார் சூரிய குமார் யாதவ்.