சச்சின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படியொரு செயலை செய்து கௌரவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் மைதானம்.
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதில் பல சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் புகழ் கிரிக்கெட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவ
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். அதில் பல சாதனைகள் இன்று வரை முறியடிக்கப்படாமல் இருக்கிறது. இதனால் சச்சின் டெண்டுல்கரின் புகழ் கிரிக்கெட்டில் மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரவி உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் தான் டெண்டுல்கரின் பிறந்தநாளுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்த WWE சூப்பர் ஸ்டார் டிரிபிள் எச்.
சச்சின் டெண்டுல்கர்
மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கருக்கு இன்று 50 வயது. வெறும் 16 வயது 205 நாட்களில் இந்திய அணிக்காக அறிமுகமான சச்சின், 24 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் நூறு சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் சச்சின் டெண்டுல்கருக்கு உண்டு. மார்ச் 16, 2012 அன்று டாக்காவில் பங்களாதேஷுக்கு எதிராக சச்சின் இந்த சாதனையை நிகழ்த்தினார்.
சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 76 முறை (டெஸ்ட்-15, ஒருநாள்-62) ஆட்ட நாயகன் விருதை வென்றுள்ளார். இந்திய அணியில் விராட் கோலி தற்போது இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். மாஸ்டர் பிளாஸ்டர் பல கிரிக்கெட் சாதனைகளுக்கு சொந்தக்காரர் என்ற பெருமைக்குரியவர், அவை விரைவில் உடைக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. இப்படி இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் சச்சின் டெண்டுல்லர் இன்று பிறந்தநாள் கொண்டாடினார்.
Happy 50th Birthday, Sachin Tendulkar 👏
— Sydney Cricket Ground (@scg) April 24, 2023
Earlier today, we unveiled the Lara-Tendulkar gates at the SCG, where all visiting players will now take to the field. pic.twitter.com/JcY3kNanR3
இந்த நிலையில் தான் சொந்த மண்ணில் மட்டுமல்லாமல் வெளிநாட்டு மண்ணிலும் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக திகழும் சச்சின் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள புகழ்பெற்ற சிட்னி மைதானத்தில் 5 போட்டிகளில் 785 ரன்களை குவித்து 157 சராசரி வைத்திருந்தார். இந்நிலையில் தான் சச்சின் டெண்டுல்கரை பாராட்டும் வகையில் சிட்னி மைதானத்தில் வெளிநாட்டு வீரர்கள் களமிறங்கும் கேட்டிற்கும் சச்சின் பெயரை வைத்துள்ளனர்.
மேலும் சச்சினோடு சேர்ந்து வெஸ்ட் இந்தியன்ஸ் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா அவர்களுக்கும் அந்த கதவிற்கு பெயரை சூட்டி பிரையன் லாரா – சச்சின் டெண்டுல்கர் என பெயரை வைத்து பெருமை படுத்தியுள்ளனர். பிரையன் லாரா இந்த மைதானத்தில் 4 போட்டிகளில் 384 ரங்களுக்கு 54 சராசரி எடுத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 5 போட்டிகள் ஆடி 785 ரங்களுக்கு 157 சராசரி வைத்துள்ளார்.
சிட்னி மைதானம் நூற்றாண்டு பழமையான ஒரு மைதானம். இதில் பல போட்டிகளும் நடைபெற்று இருக்கிறது. எனவே மற்ற மைதானங்களை போலவே இந்த மைதானத்திலும் அணிகள் தங்குவதற்கு என்று தனியாக பெவிலியன் இருக்கிறது. எனவே அந்த பெவிலியனில் இருந்து மைதானத்திற்குள் கேட் வழியாக வருவார்கள். அப்படிப்பட்ட நிலையில் தான் அந்த கேட்டிற்கு சர்வதேச போட்டியில் ஜாம்பவான்களாக இருந்த சச்சின் மற்றும் லாராவிற்கு பெயர் சூட்டி பெருமை படுத்தியுள்ளது சிட்னி மைதானம்.