அந்த இடத்தில் நாங்கள் அதை செய்து இருக்க கூடாது. தோல்வி குறித்து பேசிய இந்திய அணியின் கேப்டன் கே.எல். ராகுல்.

இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட உள்ளது. அதில் முதல் கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 1-1 என்ற வித்தியாசத்தில் தொடரை சமன் படுத

By ·

இந்திய அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளையும் விளையாட உள்ளது. அதில் முதல் கட்டமாக 3 தொடர்களை கொண்ட t20 போட்டியில் விளையாடியது. அதில் முதல் போட்டி மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. அதன் பின் 1-1 என்ற வித்தியாசத்தில் தொடரை சமன் படுத்தி இருந்தது. அதற்க்கு அடுத்த கட்டமாக 3 தொடர்களை கொண்ட ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதல் போட்டியில் வெற்றி பெற்று நேற்று இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கியது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்து இருந்தார் அணியின் கேப்டன் மார்க்ரம். அது அவர்களுக்கு சிறப்பாகவே கை கொடுத்தது என்று சொல்லலாம். 46.2 ஓவர்களில் இந்திய அணியின் அனைத்து வீரர்களும் ஆட்டமிழந்து வெளியேறினர். எனவே இந்திய அணியால் 211 ரன்களை மட்டுமே அடிக்க முடிந்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் முதல் போட்டியில் சொதப்பியது போலவே நேற்றும் அவர் 4 ரன்னிலே ஆட்டமிழந்து வெளியேறினார்.

இந்திய அணியின் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சாய் சுதர்ஷன் 83 பந்துகளில் 62 ரன்களும் இந்திய அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் 56 ரன்களும் மற்றும் அர்ஷ்தீப் சிங் 18 ரன்களை மட்டுமே அடித்து இருந்தன. இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அவர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். தென்னாப்பிரிக்கா அணியின் சார்பில் பர்கர் 3 விக்கெட்டுகளையும், ஹென்ட்ரிக்ஸ் மற்றும் மகாராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வில்லியம்ஸ் மற்றும் மார்க்ரம் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர்.

212 ரன்களை இலக்காக் கொண்டு களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி 42.3 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 215 ரன்களை எடுத்து இரண்டாவது போட்டியை வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிகபட்சமாக டோனி டி ஜோர்ஜி 119 ரன்களையும் ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்களையும் ராஸ்ஸி வான் டெர் டுசென்36 ரன்களையும் அடித்து இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் ரிங்கு சிங் மற்றும் அர்ஷ்தீப் சிங் தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இதன் மூலம் 1-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா அணி தற்போது தொடரை சமன் செய்துள்ளது. இது குறித்து கே.எல்.ராகுல் கூறுகையில்,

ஒருவேளை நாங்கள் டாஸ் வென்று இருந்தால் அது எங்களுக்கு உதவியாக இருந்து இருக்கும். பேட்டிங் செய்வது கடினமாக இருந்தது, ஆனால் நாங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தோம். நாங்கள் அதை தொடர்ந்து சென்றிருந்தால், 50-60 ரன்கள் கூடுதலாகப் பெற்றிருக்கலாம், அது போட்டியில் ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். 270 சமமாக இருந்தால் அது நன்றாக இருந்து இருக்கும். நாங்கள் பேட்டிங் செய்யும் போது, ​​240-250 கூட நன்றாக இருந்திருக்கும் என்று நினைத்தோம். ஒரு செட் பேட்டருடன், நாங்கள் அந்த ரன்களைப் பெற்றிருக்கலாம். முக்கியமான நேரத்தில் விக்கெட்டுகளை இழந்தோம்.

ஒவ்வொரு நபரின் விளையாட்டுத் திட்டம் மற்றும் அவர்கள் ஒரு குழுவாக இருப்பதை நீங்கள் நம்ப வேண்டும். முழுமையான தெளிவு மற்றும் அதை செயல்படுத்த முயற்சிக்கவும். கிரிக்கெட்டில் சரியோ தவறோ எதுவுமில்லை, உங்கள் அணிக்காக நீங்கள் பணியாற்ற முயற்சி செய்யுங்கள். முதல் பத்து ஓவர்களில் கொஞ்சம் உதவி இருந்தது. இருப்பினும் முதல் இன்னிங்ஸ் அளவுக்கு உதவவில்லை. மைதானத்தில் நடப்பதை விட்டுவிட்டு அடுத்த ஆட்டத்தில் கவனம் செலுத்த முயற்சிப்போம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை