வெளியானது ஆசிய போட்டிக்கான இந்திய அணி.. மீண்டும் வாய்ப்பை இழந்த நட்சத்திர வீரர் – முழு விபரம் இதோ

கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக்

By ·

கிரிக்கெட்டில் எது சுவாரசியமான போட்டி என்றால் அனைவருக்கும் முதலில் நியாபகம் வருவது இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தான். கஏனெனில் அண்டை நாடுகளான இவ்விரு அணிகளும் கிரிக்கெட்டை விளையாட்டாக பார்க்காமல் அதை கௌரவமாக கருதி ஆக்ரோசத்துடன் முழு திறமையை வெளிப்படுத்தி நேருக்கு நேர் மோதிக் கொள்வார்கள் என்பதாலேயே இந்தியா vs பாகிஸ்தான் போட்டிகள் உலகப்புகழ் பெற்றதாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்பாக ஆசிய கோப்பை தொடரானது பாகிஸ்தான் மற்றும் இலங்கை நாட்டில் நடைபெற உள்ளது. மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கும் இந்த தொடர் ஆகஸ்ட் 30-ஆம் தேதி முதல் செப்டம்பர் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான ஆறு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

மேலும் சமீபத்தில் இந்த தொடரில் பங்குபெறும் வீரர்கள் பட்டியலை பாகிஸ்தான் அணியானது வெளியிட்ட நிலையில் தற்போது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆசிய கோப்பை தொடருக்கான அணித்தேர்வு கூட்டத்தில் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர், அவரது குழு நிர்வாகிகள், பயிற்சியாளர் டிராவிட், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் என பலரும் கலந்து கொண்டனர்.

அதன்படி சில மணி நேரங்கள் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பிறகு தற்போது ஆசியக் கோப்பை தொடருக்கான 17 பேர் கொண்ட முழு இந்திய அணியையும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடித்திருக்கும் வீரர்களே பெரும்பாலும் 50 ஓவர் உலகக்கோப்பை தொடருக்கான இடம் பிடிப்பார்கள் என்பதனால் இந்த தொடரில் யார் இருக்க போகிறார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறித்து ஆர்வம் அதிகமாக இருந்தது.

இந்நிலையில் தான் இந்த ஆசியக் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பிடித்திருக்கும் வீரர்களே பட்டியலை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதிர்ஷ்ட வசமாக காயம் காரணமாக சமீபகாலமாகவே இந்திய அணியில் இடம்பிடிக்காமல் இருந்து வந்த கே.எல் ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர். அதோடு திலக் வர்மாவிற்கு அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய சஞ்சு சாம்சன் இந்த தொடரில் அணியுடன் பயணிக்கு வீரராக மட்டுமே இருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியின் :

1) ரோஹித் சர்மா, 2) சுப்மன் கில், 3) விராட் கோலி, 7) திலக் வர்மா, 4) ஷ்ரேயாஸ் ஐயர், 5) கே.எல் ராகுல், 6) சூரியகுமார் யாதவ், 8) இஷான் கிஷன், 9) ஹார்டிக் பாண்டியா, 10) ரவீந்திர ஜடேஜா, 11) ஷர்துல் தாகூர், 12) அக்சர் படேல், 13) குல்தீப் யாதவ், 14) பும்ரா, 15) முஹமது ஷமி, 16) முகமது சிராஜ், 17) பிரசித் கிருஷ்ணா.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை