வெளியானது இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஜெர்ஸி – எத்தனை ஆண்டுகளுக்கு இது தெரியுமா?

ஐபிஎல் 2023 தொடரானது மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த வருட ஐபிஎல் தொடரில் பல பெரிய சம்பவங்கள் நடந்தது. குறிப்பாக பைனலில் மழை காரணமாக போட்டியானது கடுமையாக பாதிக்கப்பட்டது. இறுதியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி கோப்பையை வென்றது. மேலும் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற ம

By ·

ஐபிஎல் 2023 தொடரானது மிகவும் பிரமாண்டமாக நடந்து முடிந்தது. இந்த வருட ஐபிஎல் தொடரில் பல பெரிய சம்பவங்கள் நடந்தது. குறிப்பாக பைனலில் மழை காரணமாக போட்டியானது கடுமையாக பாதிக்கப்பட்டது. இறுதியில் குஜராத் அணியை வீழ்த்தி சென்னை அணி கோப்பையை வென்றது. மேலும் 5 முறை ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் சாதனையை சென்னை அணி சமன் செய்தது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் முடிவடைதன்ஹா நிலையில் டெஸ்ட் உலகக்கோப்பை வரும் ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரையில் நடக்க இருக்கிறது. இந்த போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள ஓவலில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகிறது. ஐபிஎல் போட்டிகள் முடிவடைந்த நிலையில் இந்திய அணியில் பல வீரர்கள் இங்கிலாந்து சென்று போட்டிக்காக பயிற்சி செய்து வருகின்றனர்.

மேலும் சமீபத்தில் இப்படிப்பட்ட நிலையில் தான் 2023 டெஸ்ட் உலகக்கோப்பையில் வெற்றிபெறும் அணி பெரும் தொகையை ICC அறிவித்துள்ளது. அவர்கள் கூறியுள்ளபடி இந்த போட்டியின் வெற்றியாளர்களுக்கு பரிசுத் தொகையாக $1.6 மில்லியன் கொடுக்கப்படுகிறது. அது இந்திய மதிப்பில் ரூபாய் 13.2 கோடியாகும். மேலும் தோல்வியுற்ற அணிக்கு இறுதிப் போட்டியாளக வந்ததினால் $800,000 கிட்டத்தட்ட இந்த மதிப்பில் 66 லட்சம் பரிசு தொகையாக வழங்கப்படும்.

இந்த போட்டிக்கும் பிறகு ஒருநாள் உலகக்கோப்பை வரும் ஆக்டோபர் 23 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 24ஆம் தேதி முடிவடைகிறது. அதோடு 2023 உலகக்கோப்பை போட்டிகள் இந்தியாவில் நடைபெறுகிறது. மேலும் அதற்கு முன்னதாக ஆசியா கப் போட்டி செப்டம்பர் மாதம் நடைபெறுகிறது. இப்படி பல போட்டிகளில் விளையாடும் இந்திய அணிக்கு புதிதாக ஜெர்ஸி ஆறுமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டில் இருந்து 2020ஆம் ஆண்டு வரையில் இந்திய அணிக்கு விளையாட்டு உபகரணங்களுக்கு ஸ்பான்சராக கில்லர் ஜீன்ஸ் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஒப்பந்தம் கடந்த மே மாதம் 30ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இப்படியொரு நிலையில் இந்திய அணியின் ஸ்பான்சராக புதிதாக அடிடாஸ் நிறுவனம் பிசிசிஐயுடன் ஒப்படைந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு 2028ஆம் ஆண்டு வரையில் நீடிக்கும். இந்த இந்நிலையில் தான் டி20, ஒருநாள் போட்டி, டெஸ்ட் போட்டி என மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணியின் ஜெர்ஸியை வெளியிட்டுள்ளது அடிடாஸ் நிறுவனம்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை