இந்தியா தோத்துச்சுன்னா இத சொல்லுவிங்களா – தென்னாபிரிக்க கேப்டன் அதிரடி கருத்து.

தற்போது நடந்து வரும் உலக கோப்பை 2023 தொடரில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் அவர்கள் விளையாடிய 7 போட்டிகளிலும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இந்த உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. மேலும் இந்த வெற்றிகளி

By ·

தற்போது நடந்து வரும் உலக கோப்பை 2023 தொடரில் இந்தியா மிகவும் பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது. சொல்லப்போனால் அவர்கள் விளையாடிய 7 போட்டிகளிலும் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் இந்த உலக கோப்பை தொடரின் புள்ளி பட்டியலில் நம்பர் 1 இடத்தில் இருந்து வருகிறது. மேலும் இந்த வெற்றிகளின் மூலம் அரையிறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் இந்தியா உறுதி செய்துள்ளது.

இந்திய அணியிடம் தற்போது பேட்டிங்கிலும் பந்துவீச்சில் வீரர்கள் முழு வீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர். இடையே ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்ப்பட்டாலும் அதிலிருந்து மீண்ட இந்தியா தற்போது அவருக்கு மாற்று வீரரையும் தேர்வு செய்து எந்த மாதிரியான சூழ்நிலைக்கும் தயாராக இந்திய அணி இருந்து வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி போலவே இந்த உலக கோப்பை போட்டியில் பலமான அணியாக இருந்து வருவது தென்னப்பிரிக்க அணி. தென்னாபிரிக்கா விளையாடிய 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றியடைந்த புள்ளி பட்டியலில் நம்பர் 2 இடத்தில் இருந்து வருகிறது. இந்த மாதிரியான சூழ்நிலையில் இன்று இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணியானது கொல்கத்தா மைதானத்தில் மோதி வருகிறது.

இந்நிலையில் தொடர்ச்சியாக 7 போட்டிகளில் வென்று வரும் இந்திய அணியை வீழ்த்துவீர்களா? அல்லது சோக்கராக செயல்படுவீர்களா என இப்போட்டிக்கு முன்பாக செய்தியாளர்கள் நேரடியாகவே தென்னாப்பிரிக்கா கேப்டன் தெம்பா பவுமாவிடம் கேட்டனர்.

அதற்கு பதிலளித்த அவர் கூறுகையில் “சோக் செய்வோமா? இதற்கு நான் எப்படி பதிலளிப்பது என்று தெரியவில்லை. ஒருவேளை நாங்கள் இந்த போட்டியில் சொதப்பினால் அதை சோக்கிங் செய்து விட்டோம் என்று நான் நினைக்க மாட்டேன். ஒருவேளை இந்தியா அடைந்தால் நீங்கள் அவர்களை சோக்கர் சொல்வீர்களா என்பது எனக்கு சந்தேகமாகும். நல்ல ஃபார்மில் இருக்கும் 2 அணிகள் போட்டியில் மோதுகின்றன.

இந்த போட்டியில் யார் முக்கிய மற்றும் பலவீனங்களை பயன்படுத்துகிறார்களோ அவர்களே வெல்வார்கள். உலகக் கோப்பைக்குள் அழுத்தமான தருணங்கள் எப்போதும் இருக்கும் என்பதை நாங்கள் புரிந்து கொள்கிறோம். ஆனால் இந்த இடத்திற்கு நாங்கள் வருவதற்கு முன் நிறைய கடினமான தருணங்களை கடந்து வந்துள்ளோம் எங்களால் முடிந்த வரை அவர்களை சமாளிப்போம். ஆனால் சோக்கர் எனும் வார்த்தையை இதுவரை நான் பயிற்சியில் கேட்கவில்லை” என்று கூறினார் தென்னாபிரிக்க கேப்டன் பவுமா

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை