வீடியோ: கடைசி ஓவரில் பந்துகளை பறக்கவிட்ட தல தோனி. இவருக்கு 42 வயது என்றால் யாரும் நம்ப மாட்டார்கள் போல..
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 29ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்பர
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் இன்று 29ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது. மும்பை அணி இதற்கு முன்பு பெங்களூரு அணியிடம் வெற்றி பெற்று அதே போல் சென்னை அணி கொல்கத்தா அணியுடன் வெற்றி பெற்று இன்றைய போட்டியில் மோதியது.
இதில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சில ஓவர்களில் மட்டுமே கை கொடுத்தது என்று சொல்லலாம் அதன் பின்பு சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் உடன் இணைந்து துபேவும் சென்னை அணிக்கு ரண்களை குவித்து வந்தனர். அதன் பின் இறுதியாக வந்த சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியும் அவரது பங்கிற்கு கடைசி நான்கு பந்தில் 20 ரன்களை அவ அவர் குவித்திருந்தார் மும்பை அணி ஆரம்பத்தில் பவர் பிளேவில் சிறப்பாக பந்து வீசினார்கள் ஆனால் அதன்பின் அவர்களால் சிறப்பாக ஜொலிக்க முடியவில்லை ஹர்திக் பாண்டியாவும் அதிக ரன்களை வாரி கொடுத்து இருந்தார்.
எனவே சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து206 ரன்களை குவித்தது. ரஹானே ஆரம்பத்தில் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் ரச்சின் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தார். அதன் பின் ருதுராஜ் சிறப்பாக அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 69 ரன்களை குவித்து இருந்தார் அதில் 5 சிக்சரும் 5 பவுண்டரிகளும் அடங்கும். ஆனால் அதன் பின் வந்த மிட்சல் சற்று நிதனகமாக விளையாடஅணிக்கு அந்த நேரத்தில் ரன்கள் பெரிய அளவில் வரவில்லை.
இருப்பினும் மிட்சலுக்கு முன்னதனாகவே துபே ருதுராஜ் உடன் இணைந்து அவரும் ரன்களை குவித்து இருந்தார்.மிட்சல் ஆடமிழந்ததற்க்கு பின் அனைத்து ரசிகர்களும் எதிர்பாத்து கொண்டு இருந்த தல தோனி களமிறங்கினார். அவர் வந்த போது 20வது ஓவரை மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசி இருந்தார். அந்த ஓவரில் தோனி ஆடிய நான்கு பந்துகளில் 6,6,6,2 என அந்த ஓவரை சிறப்பாக அடித்து இருப்பார். அவருக்கு 42 வயது என்றால் யாரும் நம்ப கூட மாட்டர்கள்.
My dear Thala! ⬅️⬇️➡️ 🦁 👑 #MIvCSK #WhistlePodu 🦁💛
— Chennai Super Kings (@ChennaiIPL) April 14, 2024
pic.twitter.com/Hn3Kg2c4HW
அந்த அளவிற்கு அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. துபே 38 பந்துகளில் 66 ரன்களை அவர் குவித்து இருந்தார். அதில் 10 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். மும்பை அணி தற்போது 11.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 109 ரன்களை குவித்துள்ளது