வீடியோ: போட்டிக்குப் பின் நடக்க முடியாமல் நடக்கும் தல தோனி. இணையத்தில் பரவும் உருக்கமான வீடியோ
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 29ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்ப
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2024 மார்ச் 22 முதல் தொடங்கி தற்போது வரை கோலாகலமாக தொடங்கி பெற்று வருகிறது. அதில் நேற்று 29ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் பலப்பரிட்சை செய்தது. அதில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து206 ரன்களை குவித்தது. ரஹானே ஆரம்பத்தில் 5 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் ரச்சின் உடன் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து இருந்தார்.
அதன் பின் ருதுராஜ் சிறப்பாக அதிரடியாக விளையாடி 40 பந்துகளில் 69 ரன்களை குவித்து இருந்தார் அதில் 5 சிக்சரும் 5 பவுண்டரிகளும் அடங்கும். ஆனால் அதன் பின் வந்த மிட்சல் சற்று நிதனகமாக விளையாடஅணிக்கு அந்த நேரத்தில் ரன்கள் பெரிய அளவில் வரவில்லை. இருப்பினும் மிட்சலுக்கு முன்னதனாகவே துபே ருதுராஜ் உடன் இணைந்து அவரும் ரன்களை குவித்து இருந்தார்.மிட்சல் ஆடமிழந்ததற்க்கு பின் அனைத்து ரசிகர்களும் எதிர்பாத்து கொண்டு இருந்த தல தோனி களமிறங்கினார். அவர் வந்த போது 20வது ஓவரை மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா வீசி இருந்தார்.
அந்த ஓவரில் தோனி ஆடிய நான்கு பந்துகளில் 6,6,6,2 என அந்த ஓவரை சிறப்பாக அடித்து இருப்பார். அவருக்கு 42 வயது என்றால் யாரும் நம்ப கூட மாட்டர்கள். அந்த அளவிற்கு அவரது பேட்டிங் சிறப்பாக இருந்தது. துபே 38 பந்துகளில் 66 ரன்களை அவர் குவித்து இருந்தார். அதில் 10 பவுண்டரிகளும் 2 சிக்சர்களும் அடங்கும். அதன் பின் பேட்டிங் செய்த மும்பை அணி ஆரம்பத்சில் அதிரடியாக விளையாடினாலும் அதன் இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதில் அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 105 ரன்களும் திலக் வர்மா 31 ரன்களும் இஷான் கிஷன் 23 ரன்களையும் அடித்து இருந்தார்.
எனவே சென்னை அணி 20 ரன்கள் வித்தியாத்தில் வெற்றியை பதிவு செய்தது. சென்னை அணி சார்பில் பத்திரனா நான்கு விக்கெட்டுகளையும் ரஹ்மான் அம்ற்றும் தேஷ் பாண்டே தலா ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். இந்த வெற்றி சென்னை அணியின் 150 வெற்றியாகும். அது மட்டுமல்லாமல் இது சென்னை அணிக்காக தல தோனியின் 250வது வெற்றியாகும். இதில் சென்னை அணியி வெற்றிக்கு முக்கிய காரணம் என்றால் இருந்தியாக வந்து தல தோனி அடிந்த அந்த 20ரன்கள் தான் என்று கூறலாம். இந்த ஐபிஎலில் வெளி மைதானத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி
MS Dhoni last night at the team hotel. Man is limping but still going at it for his fans ❤️🔥🥹#IPL2024 #MIvsCSK pic.twitter.com/hR6JNVUsgg
— Vinesh Prabhu (@vlp1994) April 15, 2024
சமீபத்தில் வைரலான ஒரு வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் இந்தக் கேள்விகளைக் கேட்கிறார்கள். இந்த வீடியோவில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் லிப்ட்டுக்கு வெளியே தள்ளாடுவதைக் காணலாம். தோனி நேற்று தனது அறையை நோக்கி அணியுடன் சென்று கொண்டிருந்த போது எடுக்கப்பட்ட காணொளி இது. அவர் நடக்க மிகவும் சிரமப்பட்டார். இந்த வீடியோ குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் கவலை தெரிவித்தனர். ஏனென்றால் ஐபிஎல் 2024ல் இருந்து எம்எஸ் தோனி வெளியேறுவதை அவர்கள் விரும்பவில்லை. போட்டியின் அவரது கடைசி சீசனாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.