“உங்களுடைய அன்பிற்கு மிகவும் நன்றி” – ஐபிஎல் 2023ல் தோல்விக்கு பிறகு சூரியகுமார் யாதவ் போட்டுள்ள உருக்கமான ட்விட் பதிவு.

ஐபிஎல் 2023 தொடரில் மும்பை அணி வெளியேறிய பிறகு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூரிய குமார் யாதவ் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது. அதுமட்டுமல்லால் ஐபிஎல்

By ·

ஐபிஎல் 2023 தொடரில் மும்பை அணி வெளியேறிய பிறகு அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் சூரிய குமார் யாதவ் பகிர்ந்துள்ள பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மும்பை அணி ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை ஐபிஎல் கோப்பைகளை வென்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது. அதுமட்டுமல்லால் ஐபிஎல் வரலாற்றை சென்னை அணியுடன் போட்டிபோடும் அளவிற்கு அதிகமான ரசிகர் கூட்டத்தை கொண்டது மும்பை அணிதான்.

அதற்கு முக்கியமான காரணம் மும்பை அணியில் உள்ள நட்சத்திர வீரர்கள் தான். ஏனென்றால் இந்தியாவின் மிகவும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் மும்பை அணிக்காக விளையாடினார். அதோடு பல இந்திய அணியில் இருக்கும் வீரர்களும், பிரபலமான வெளிநாட்டு வீரர்களும் மும்பை ணியில் விளையாடுவதினால் வட மாநிலங்களில் மட்டுமல்லாமல் தமிழ் நாட்டிலும் கூட அதிக ரசிகர்கள் மும்பை அணிக்கு இருக்கின்றனர்.

இதனால் எல்லா சீசன்களையும் போலவே இந்த சீசனிலும் மும்பை அணிக்கு ரசிகர்களின் கூட்டம் ஆர்ப்பரித்து. தொடக்கத்தில் மும்பை அணி மற்றும் அதன் வீரர்கள் தடுமாறினாலும், பின்னர் சுதாரித்துக்கொண்டு தொடர்ந்து 200ரன்களுக்கு மேலாக தேவைப்படும் போட்டிகளில் வெற்றிடைந்தது. ஆனால் கடைசியாக மும்பை விளையாடிய குவாலிபயர் 2 போட்டியில் மோசமான தோல்வியை தழுவியது.

இதனால் ஐபிஎல் 2023 பைனலுக்கு சென்னை அணி செல்லும் வாய்ப்பை இழந்தது. மேலும் ரசிகர்களுக்கும் ஏமாற்றமாகத்தான் இருந்தது. இருந்த போதிலும் மும்பை அணி கடந்த சீசனில் கடைசி அணியாக இருந்த நிலையில் இந்த சீசன் சரியாக கம்பேக் கொடுத்து குவாலிபயர் ஓன்று வரையில் வந்தனர். இந்த இந்நிலையில் தான் சூரிய குமார் யாதவ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

சூரியகுமார் போட்டுள்ள பதிவு :

அந்த பதிவில் “இந்த ஐபிஎல் சீசனுக்கு நாங்கள் நிமிர்ந்து தலை வணங்குகிறோம். இந்த சீசன் முழுவதும் ஏற்றமும் இறக்கமுமாக இருந்தது. இந்த சீசன், இந்த அணி எப்போதும் என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும். அடுத்த சீசன் கண்டிப்பாக வலிமையாக திரும்புவோம். உங்களுடைய அன்பிற்கும் அரவணைப்பிற்கும் நன்றி என்று பதிவிட்டிருந்தார்.

சூரிய குமார் யாதவ் இந்த சீசனில் தொடக்கத்தில் சொதப்பினாலும் போக போக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். 16 போட்டிகளில் விளையாடிய அவர் 605 ரன்கள் குவித்து, ஐந்து அரைசதங்கள் மற்றும் ஒரு சதத்துடன், 43.21 என்ற பயங்கர சராசரியுடன் மும்பை அணியின் ரசிங்கர்களை கவர்ந்தார். அதுமட்டுமல்லாமல் கடைசி போட்டியில் கூட 234 ரன்களைத் துரத்துகையில் சூர்யகுமார் 38 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை