எங்களோட Plan அது தான். அதை தான் நாங்க செய்தோம் – கே.எல்.ராகுல் பேச்சு.

IND vs ENG முதல் போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் நேற்று முதல் நாளில் காலை 9 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறப்பாக கை கொடுத்து இருந்தாலும். அதன்பின் இந்திய அணியின் பந்துவீச

By ·

IND vs ENG முதல் போட்டியானது ஹைதராபாத் மைதானத்தில் நேற்று முதல் நாளில் காலை 9 மணிக்கு தொடங்கியது. அதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். அது அவர்களுக்கு ஆரம்பத்தில் சிறப்பாக கை கொடுத்து இருந்தாலும். அதன்பின் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வந்தனர். உணவு இடைவேளைக்கு முன்னதாக இங்கிலாந்து அணி 103/3 விக்கெட்டுகளை இழந்து இருந்தது.

அதன் பின் நான் இங்கிலாந்து அணியின் பெத்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார். இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டோக்ஸ் 70 ரன்களும் ஜானி பேர்ஸ்டோவ் 37 ரன்களும் பென் டக்கெட் 35 ரண்களும் அடித்திருந்தனர். இந்திய அணியின் சார்பில் அஸ்வின் ஜடேஜா மற்றும் சிறப்பாக பந்துவீச்சு இங்கிலாந்து அணியை சுருட்டி இருந்தனர். இங்கிலாந்து அணி 246 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி சார்பில் அஷ்வின் மற்றும் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் பும்ரா மற்றும் அக்சர் பட்டேல் 2 விக்கெட்டுகளையும் எடுத்து இருந்தனர். தற்போது இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் ஜெய்ஸ்வால் மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி இருந்தனர். நாள் முடிவில் இந்திய அணி 119 ரன்களுக்கு 1 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. அதில் ஜெயஸ்வால் 76 ரன்களும் 24 ரன்களும் 14 ரன்களும் அடித்து இருந்தனர். ரோஹித் ஷர்மா மட்டுமே தனது விக்கெட்டை இழந்து இருந்தார்.

இன்றைய நாள் தொடக்கத்தில் ஆரம்பத்திலே ஜெய்ஸ்வால் 80 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அதன் பின் சற்று நேரத்தில் கில்லும் 23 ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.அதன் பின் கேஎல் ராகுல் 86 ரன்களும் ஷ்ரேயாஸ் ஐயர் 35 ரன்களும் ஸ்ரீகர் பாரத் 41 ரன்களும் ரவிச்சந்திரன் அஸ்வின் 1ரன்களும் அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்கள். அதன் பின் ஜடேஜாவுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து அக்சர் பட்டேலும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை சிதற அடித்தனர்.

இறுதியாக இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 421 ரன்களை அடித்து இருந்தனர். எனவே இந்திய அணி 175 ரன்கள் முன்னிலையில் இன்றைய நாளை முடிவு செய்தது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல்.ராகுல் கூறுகையில், SA இல் 100 ரன்கள் எனக்கு ஓரளவு நம்பிக்கையை அளித்தது, மேலும் எனது காயத்திலிருந்து 6-7 மாதங்கள் கிரிக்கெட் விளையாடினேன். நான் பேட்டிங் செய்ய வெளியே செல்லும்போது பாசிடிவ் ஆக இருக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. தென்னாப்பிரிக்காவை விட (ஆடுகளத்தில்) மிகவும் வித்தியாசமானது – சிறிது நேரம், பந்து பழையதாக மாற, மெதுவாகவும் மெதுவாகவும் ஆனது.

ஒரு சவாலாக இருந்தது, ஷாட்களை விளையாடுவதற்கான வாய்ப்புக்காக நான் காத்திருக்க வேண்டியிருந்தது. மிடில் ஆர்டரில் பேட்டிங் செய்வதை ரசிக்கிறேன். நான் நீண்ட காலமாக டாப்-ஆர்டரில் பேட்டிங் செய்வதை ரசித்தேன், ஆனால் இங்கே நீங்கள் உங்கள் கால்களை உயர்த்துவதற்கு சிறிது நேரம் கிடைக்கும், பந்து எப்படி இருக்கிறது, பந்து வீச்சாளர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைப் பார்க்கவும், உங்கள் இன்னிங்ஸைத் திட்டமிடவும் இது நேரத்தை வழங்குகிறது. இது இரண்டாவது நாள், நாங்கள் முழு நாளையும் பேட் செய்து முடிந்தவரை அதிக ரன்கள் எடுக்க விரும்பினோம் (அணியின் திட்டத்தில்). அரட்டை என்பது முடிந்தவரை பேட் செய்வதும், எல்லாரும் பேட் செய்து நம்மால் இயன்ற ரன்களை எடுப்பதும்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை