மைதானத்தின் ஆடுகளம் மீது அந்த மாறி எந்த ஒரு பிரச்சனையும் கிடையாது – கேன் வில்லியம்சன்.
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நாக் அவுட் எனப்படும் செமி பைனல் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அ
உலக கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த உலக கோப்பை 2023 இந்தியாவில் நடைபெற்று லீக் போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் நேற்று நாக் அவுட் எனப்படும் செமி பைனல் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள இந்திய அணியும் நான்காம் இடத்தில் உள்ள நியூசிலாந்து அணியும் பல பரிட்சை செய்தது.
இதற்கு முன்னதாக இந்திய அணி மற்றும் நியூசிலாந்து அணி மோதிய நாக் அவுட் போட்டிகளில் அதிக அளவில் நியுசிலாந்து அணியே வெற்றி பெற்றுள்ளது. அதுவே இந்த முறை நிகழுமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆனால் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து சரியான முடிவை எடுத்ததார். இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 397 ரன்கள் குவித்துள்ளது.
இந்திய அணிக்கு அதிக பட்சமாக விராட் கோலி 117 ரன்களுக்கும், ஷ்ரேயஸ் ஐயர் 107 ரன்களும், கில் 80 ரன்களும் எடுத்து இருந்தனர். இந்திய அணி அணிக்கு கேப்டன் ரோஹித் ஷர்மா சிறப்பான தொடக்கத்தை அளித்தார் இருப்பினும் அவரால் அரை சதத்தை பூர்த்தி செய்யாமல் ஆட்டமிழந்தார். ஆகையால் இந்திய அணி 4விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 397 ரன்களை குவித்து இருந்தனர். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சு மோசமாகத்தான் இருந்தது. சவூதீ 2 விக்கெட்டுகளையும் போல்ட் 1 விக்கெட்டு மட்டுமே எடுத்து இருந்தனர்.
398 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறி இருந்தாலும் அதன் மிட்சல் சிறப்பாக விளையாடி இந்திய அணியின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இருப்பினும் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 327 ரன்களை மட்டுமே அடித்து 70 ரன்கள் வித்தியசத்தில் தோல்வியை தழுவியது. இதன் மூலம் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இருப்பினும் இந்த போட்டியில் ஆடுகளம் இந்திய அணிக்கு சாதகமாக அமைக்கப்பட்டது என்று பலரும் அவர்களது கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையில் போட்டிக்குப் பின் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் அது குறித்து கருத்துக்களை தெரிவித்து உள்ளார்.
அது குறித்து அவர் கூறுகையில் மைதானம் மற்றும் ஆடுகளம் மீது எந்த ஒரு தவறும் கிடையாது. அதாவது ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட ஆடுகளம் நான் பார்த்தபடியே இது ஒரு விளையாட நல்ல ஆடுகளம் தான் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது அதுவே அவர்களுக்கு நன்றி தொடக்கமாக அமைந்தது. கண்டிஷன் அடிப்படையில் செய்வது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும் இதைத்தான் இந்த தொடர் முழுவதும் பார்த்து வருகின்றோம். மற்றபடி வேற எதுவும் கிடையாது. பரவாயில்லை நாங்கள் இதைத்தான் எதிர்பார்த்து விளையாடினோம். இந்திய அணி உண்மையில் நன்றாக சிறப்பாக விளையாடினார்கள். அவர்கள் இந்த நிலைமைக்கு மேலே செல்ல முடியுமானால் எங்களுக்கு வருத்தமாக தான் இருக்கின்றது என்றும் அவர் கூறியிருந்தார்.