இந்தியாவில் விளையாடும் போது வீரர்களுக்கு அதை செய்ய தெரிந்து இருக்க வேண்டும் – பும்ராவின் அதிரடி பேச்சு.
இந்தியாவில் விளையாடும் போது பந்தை ஸ்விங் செய்ய தெரிந்து இருக்க வேண்டும் - பும்ராவின் அதிரடி பேச்சு. . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.நேற்று இரண்டாவது போட்டியில்
இந்தியாவில் விளையாடும் போது பந்தை ஸ்விங் செய்ய தெரிந்து இருக்க வேண்டும் – பும்ராவின் அதிரடி பேச்சு. . இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 தொடர்களை கொண்ட டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்களில் இந்திய அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி பெற்றது.நேற்று இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் தேர்வு செய்திருந்தது. இந்தப் போட்டியானது விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திய அணி ஆரம்பத்தில் மெதுவான தொடக்கத்தை அளித்து இருந்தாலும் அதன் பின் சிறப்பாகவே விளையாடி கொண்டு இருந்தது. ரோஹித் ஷர்மா 14 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறி இந்திய அணி ஏமாற்றத்தை அளித்திருந்தார். அதன் பின்வந்த சுப்மான் கில் 34 ரன்கள் ஆட்டம் இழந்து வெளியேறி தனக்கு அளிக்கப்படும் வாய்ப்பை இழந்து கொண்டே வருகிறார். அதன் பின் ஸ்ரேயாஸ் ஐயர் 27 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்திய அணி இன்றைய நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 396 ரன்களை குவித்து இருந்தது. இதில் ஜெய்ஸ்வால் மட்டுமே தனி ஒரு மனிதராக போராடி 209 ரன்களை குவித்து இருந்தார். இதில் அவர் 19 பவுண்டரிகளும் 7 சிக்சர்களும் அவர் அடித்து இருந்தார். இந்திய அணியின் தூணாக இருந்து இந்திய அணிக்கு ரன்களை குவிக்க உதவி இருந்தார். அதற்க்கு பிறகு அதிகபட்சமாக கில் 34 ரன்களும் படிதார் 32 ரன்களையும் அடித்து இருந்தார். இங்கிலாந்து அணி சார்பில் பந்துவீச்சாளர் அண்டர்சன், அகமது மற்றும் பஷிர் தலா மூன்று விக்கெட்டுகளையும் ஹார்ட்லி ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருந்தனர்.
அதன் பின் இன்றைய நாளை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் சிறப்பான தொடக்கத்தை அளித்து இருந்தனர். இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் திணறி இருந்தாலும் அதன் பின் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களை திணற வைத்து வந்தனர். இங்கிலாந்து அணி 253 ரன்னில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.இங்கிலாந்து அணியின் அதிகபட்சமாக க்ரேலி 76 ரன்களும் பேர்ஸ்டோ 25 ரன்களும் ஸ்டோக்ஸ் 47 ரன்களும் அடித்து இருந்தனர்.
இந்திய அணியின் பந்துவீச்சாளர் பும்ரா இங்கிலாந்து அணியை சுருட்டி இருந்தார். பும்ரா 6 விக்கெட்டுகளையும் குல்தீப் 3 விக்கெட்டுகளையும் அக்சர் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.அதன் பின் இதே நாளில் மீண்டும் பேட்டிங் 28 ரன்களை பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது. இதில் சிறப்பாக பந்து வீசிய பும்ரா கூறுகையில், நான் ஒரு மாயாஜால பந்து வீச நினைக்கவில்லை. அந்த நேரத்தில், நான் ஒரு நேரத்தில் ஒரு பந்தில் கவனம் செலுத்தினேன், ஏனென்றால் கிரிக்கெட்டில் நான் இறுதி இலக்கை ஆரம்பத்தில் கவனம் செலுத்தும்போது, அது எனக்கு வேலை செய்யவில்லை.
இந்தியாவில் விளையாடும் போது பந்தை ஸ்விங் செய்ய தெரிந்து இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட் உங்களுக்கு பொறுமையைக் கற்றுக்கொடுக்கிறது, இல்லையா? நீங்கள் இப்போது மாயாஜால டெலிவரிகளை பௌல் செய்ய முயற்சிக்கும்போது அது வேலை செய்யாது. உங்களிடம் எல்லாவற்றையும் வைத்திருந்தாலும், எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. இன்று என்ன வேலை செய்கிறது மற்றும் காலத்தின் தேவை என்ன என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள் என்றும் அவர் கூறினார்.