வீடியோ: உலகக்கோப்பையில் அதனால் தான் எனக்கு அடுத்தடுத்து போட்டிகளில் இடம் கிடைக்கவில்லை – வெளிப்படையாக பேசிய அஷ்வின்.

உலகக்கோப்பை 2023-ல் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. இதில் தமிழக வீரர் அஷ்வின் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் ஒரு நாள் போட்டியில் இடம்பெற்று இருந்தார். இருப்பினும் அவருக்கு ஒரு போட்டியில் மட்டுமே அவர் விளையாடி இருந்தார் அதன் பின்

By ·

உலகக்கோப்பை 2023-ல் இந்திய அணி ஆஸ்திரேலியா அணியிடம் இறுதிப்போட்டியில் தோல்வியை தழுவி இருந்தது. இதில் தமிழக வீரர் அஷ்வின் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்திய அணியில் ஒரு நாள் போட்டியில் இடம்பெற்று இருந்தார். இருப்பினும் அவருக்கு ஒரு போட்டியில் மட்டுமே அவர் விளையாடி இருந்தார் அதன் பின் நடந்த அணைத்து போட்டிகளிலும் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. இது குறித்து அவர் அவரது சமூக வலைதளத்தில் சில கருத்துக்களை அவர் பகிர்ந்துள்ளார்.

அஷ்வின் கூறியது:

உலகக்கோப்பை போட்டி நடைபெறுவதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் எனக்கு அழைப்பு வந்தது உலக கோப்பையில் நீங்கள் விளையாட உள்ளீர்கள் என்று. எனக்கு இந்த இறுதி போட்டி இந்திய அணி நாம் தான் வெற்றி பெறுவோம் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தத் தோல்வி வீரர்களுக்கு உறங்கி மறுநாள் எழுந்தால் தான் அந்த வலி தெரியும். இந்த உலகக் கோப்பை தொடங்குவதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணியிடம் விளையாடிய போட்டிகளில் எனக்கு மூன்று போட்டிகளில் 2 போட்டிகளில் வாய்ப்பு கிடைத்தது. அதில் இரண்டிலும் நான் சிறப்பாக செயல்பட்டேன். எனவே என்னிடம் நீங்கள் அணியில் கட்டாயம் இருப்பீர்கள். இரண்டு போட்டிக்கு பிறகு ஒய்வு எடுக்க சொல்லி இருந்தார்கள். ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்காக நீண்ட நாள் கழித்து சேப்பாக்கம் மைதானத்தில் நான் விளையாடினேன்.

நான் அந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசி இருந்தேன் என்னுடைய உலக கோப்பை கனவு அந்த போட்டியுடன் முடியும் என்று நான் நினைக்கவில்லை. பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் ரோஹித் சர்மா நன்றாக செயல்பட்டனர். நான் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடிய போட்டிகளில் விளையாடிய பின் ஷர்துல் தாக்கூர் விளையாடி இருந்தார் அதன் பின் எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நினைத்து இருந்தேன். ஆனால் எதிர் பாரத விதமாக ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் ஏற்பட்டு அவர் உலகக்கோப்பையில் இருந்து விலகினார். அது எனக்கு இதயங்களை சுக்குநூறாக உடைத்து. ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது இந்திய அணியின் பந்து வீச்சில் சற்று மாற்றத்தை ஏற்படுத்தியது. டீ காக் இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார். அவர் ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெற்றுவிட்டார்.

இந்த உலகக்கோப்பை போட்டியில் நியூசிலாந்தின் வீரர் ரச்சின் ரவீந்திர சிறப்பாக செயல்பட்டு இருந்தார். நான் இந்திய அணிகள் வெற்றி பெறும் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருந்தேன் ஆனால் கோப்பையை பாட் கம்மின்ஸ் கைப்பற்றிவிட்டார். பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்பதால் முகமது ஷமி மற்றும் ஆடம் ஜாம்பா சிறப்பாக செயல்பட்டு இருந்தனர். ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் மீது முழு நம்பிக்கையும் அவர் வைத்திருந்தார். ட்ராவிஸ் ஹெட்டை பற்றி பார்த்தால் அவர் கடைசியாக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன் போட்டியில் மேலும் நமக்கு சற்று பதம் பார்த்தார். ஆஸ்திரேலியா அணி அதிர்ஷ்டத்தால் வெற்றி பெறவில்லை அவர்கள் சரியாக விளையாடிய இந்த உலக கோப்பையில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

நான் சமூக வலைத்தளங்களில் இருந்து சற்று ஒரு நாட்கள் வெளியேறும் என்று எண்ணி இருந்தேன் அப்போது ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவரது ஆட்டத்தை பார்த்து என்னால் பொறுத்து கொள்ள முடியாமல் நான் ட்விட்டரில் ஒரு பதிவை போட்டிருந்தேன். அவ்வளவு அற்புதமான மேக்ஸ்வெல் அந்த போட்டியில் 200 ரன்னுக்கு மேல் அடித்திருந்தார். ரோகித் சர்மா மற்றும் பும்ரா தன்னலமற்று போட்டிகளில் அவர்கள் விளையாடினார்கள். அதேபோல் ஷ்ராயஸ் ஐயர் மிடில் ஆர்டரில் சிறப்பாக பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு விளையாடியிருந்தார். ஜடேஜாவிற்கு பேட்டிங்கில் அந்த அளவுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருக்கு பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு இருந்தார்.

இந்திய அணி சிறப்பாக ஒட்டுமொத்த அணியாக சிறப்பாக செயல்பட்டிருந்தது. ஆனால் இறுதிப் போட்டியில் தோல்வி தழுவியதை என்னால் சற்று ஏற்ற கொள்ள முடியவில்லை. எனக்கு இந்திய அணி வெற்றி பெரும் என்று கண்மூடி தனமாக என்ற நம்பிக்கை இருந்தது. வெளிநாட்டுகளில் இருக்கும் பத்திரிக்கையாளர்கள் இந்திய அணி மைதானத்தின் ஆடுகளம் குறித்து இந்தியா அவ்வாறு செய்து விட்டது என்று கூறுபவர்கள் அதை கேட்கும் போதெல்லாம் எனக்கு சிரிப்பு தான் வரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

Sports AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை