“ருத்ர தாண்டவம் ஆடிய பென் ஸ்டோக்ஸ்” போராடி தோற்ற இங்கிலாந்து – ஆஸ்திரேலியாவிற்கு இரண்டாவது வெற்றி.
சமீபத்தில் தொடங்கிய அஷஸ் 2023 போதில் ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியில் பிரமாதமாக விளையாடி திரிலிங் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் தற்போது 2 வது போட்டியானது லார்ட் மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங
சமீபத்தில் தொடங்கிய அஷஸ் 2023 போதில் ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் போட்டியில் பிரமாதமாக விளையாடி திரிலிங் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் தற்போது 2 வது போட்டியானது லார்ட் மைத்தனத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச முடிவு செய்தது. அதன் படி களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியக்கு தொடக்கத்தில் ஒரு விக்கெட் விழுந்தாலும் சிறப்பாக விளையாடி 417 ரன்களை அடித்தார்கள். இதில் டிராவிஸ் ஹெட் 77 ரன்களும், ஸ்மித் 111 ரன்களையும் விளாசினார்கள்.
இதனையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக இருந்தது. இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் அடுத்தது ஆஸ்திரேலியாவின் அபாரமான பந்துவீசல் ஆட்டமிழக்க மறுபுறம் பென் டக்கெட்ட 98 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் இன்னிங்கில் 325 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது.
இதனால் இரண்டாவது இன்னிங்கில் ஆஸ்திரேலியாவிற்கு சுலபமாக இருந்தது. இதனையடுத்து ஆஸ்திரேலியா 2 வது இன்னிங்கில் 279 ரன்களை விளாசி 371 என்ற மெகா டார்கெட்டை ஆத்திரேலியா இங்கிலாந்திற்கு வைத்தது. இந்நிலையில் இரண்டவது இன்னிங்கை ஆடிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே பெரிய அதிர்ச்சியாக இருந்தது. சாக் கிராலி மற்றும் ஓலி போபே, ஹாரி ப்ரூக் போன்றபாகள் சொற்ப ரன்களில் வெளியேற இங்கிலாந்திற்கு அழுத்தம் கூடியது.
இந்நிலையில் ஒருபக்கம் அழுத்தம் கூடினாலும் மறுபக்கம் தொடக்கத்தில் பொறுமையாக விளையாடினார் பென் ஸ்டோக்ஸ். அவரோடு பென் டக்கட் அரை சதத்தை விளாசினார். இந்நிலையில் 28 வது ஓவரை கேமரூன் க்ரீன் வீச அதனை பைன் லெக்கில் அடித்த பென் டக்கட் ஆட்டமிழந்தார். ஆனால் இதற்கு பிறகு தான் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அதிரடியாக ஆட தொடங்கினார். ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துகளை நாலாபுறமும் விளாசினார் பென் ஸ்டாக்ஸ்.
இதனால் கிட்டத்தட்ட போட்டியானது அப்படியே தலைகீழாக மாறியது. மேலும் 150 ரன்களையும் கடந்த பென் ஸ்டகோக்ஸ்சை எப்படி வீழ்த்துவது என்று அனைவரும் பார்த்துக்கொண்டிருக்கும் ஒருவழியாக ஜோஷ் ஹேசல்வுட் பந்துல் ஆட்டமிழந்தார் பென் ஸ்டோக்ஸ். இதற்கு பிறகு வந்த பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் எடுத்தும் எடுக்காத நிலையில் ஆஸ்திரேலியா ஆஷஸ் 2 வது போட்டியில் வெற்றி பெற்றது. மேலும் இன்னமும் ஒரு வெற்றி பெற்றால் இந்த தொடரில் ஆஸ்திரேலியா வென்றுவிடும் என்பது குறிப்பிடதக்கது.